பட்ஜெட் 2016: வேலைநலன் கூடுதல் வருமானத் திட்டத்திற்கு அதிக ஊழியர்கள் தகுதி

சிங்கப்பூரில் குறைந்த வருமான ஊழியர்களும் உடற்குறையுள்ள ஊழியர்களும் ஊழியரணியில் கூடுதல் ஆதரவை இனி எதிர்பார்க்கலாம். இதை நேற்று தமது வரவு செலவுத் திட்டத்தில் அறிவித்த நிதியமைச்சர் ஹெங் சுவீ கியட், இதற்கு ஏதுவாக வேலைநலன் கூடுதல் வருமானத் திட்டமும் வேலைநலன் பயிற்சி ஆதரவுத் திட்டமும் மேம்படுத்தப்படும் என்றார். இதில் குறைந்த வருமான ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தும் வேலைநலன் கூடுதல் வருமானத் திட்டத்தில்தான் பெரிய மாற்றங்கள் வரவுள்ளன என்றும் அவர் விளக்கினார். இத்திட்டத்திற்கு தகுதி பெறும் வருமான வரம்பு $1,900லிருந்து $2,000ஆக உயர்த்தப்பட உள்ளது.

இதனால், கடைசி நிலையில் உள்ள 20 விழுக்காடு ஊழியர்கள் அதிக அளவில் பயன்பெறும் அதே நேரத்தில் இந்தத் திட்டத்தின் மூலம் கிட்டத்தட்ட 460,000 ஊழி யர்கள் பயனடைவர் என்றும் அவர் தெரிவித்தார். இந்தத் திட்டத்தின் வழி பயன் பெறும் ஊழியர்கள், அவர்களின் வருமானம், வயதைப் பொறுத்து கூடுதல் தொகையைப் பெறலாம். இதனால், ஊழியர்கள் ஆண்டு ஒன்றுக்கு தற்பொழுது கிடைக்கக் கூடிய $3,500க்குப் பதிலாக கூடுதலாக, $3,600ஐ எதிர்பார்க்கலாம். உதாரணமாக, மாதம் ஒன்றுக்கு $1,000லிருந்து $1,600 வரை வருமானம் பெறும் ஒருவர் $100க்கும் $500க்கும் இடைப்பட்ட தொகையை கூடுதலாகப் பெற லாம். மற்றொரு உதாரணத்தை சுட்டிய திரு ஹெங், மாத வரு மானம் $1,200 பெறும் ஒரு 55 வயது ஊழியர், வேலைநலன் கூடுதல் வருமானத் திட்டம் மூலம் இப்போது கூடுதலாக ஆண்டொன் றுக்கு $2,900ஐ பெறுவார்.

இதில் 40 விழுக்காட்டை அவர் கையில் ரொக்கமாகவும் மீதி 60 விழுக்காட்டை தமது மத்திய சேம நிதிக் கணக்கிலும் பெறுவார் என்று விளக்கினார். இதன்மூலம் அந்த ஊழியர் தமது 65வது வயதில் தமது சேம நிதிக் கணக்கில் கூடுதலாக $3,500ஐ பெறுவார் என்றும் அவர் கூறினார். இதைப் பெறுவதற்கான தகுதி யும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறிய நிதியமைச்சர் ஹெங், தற்பொழுது இதைப் பெற ஒருவர் தொடர்ச்சியாக மூன்றில் இரண்டு மாதங்கள், ஆறில் மூன்று மாதங்கள் அல்லது ஓராண் டில் ஆறு மாதங்கள் வேலை பார்க்க வேண்டும் என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!