பட்ஜெட் 2016: நிறுவனங்கள், முதியோர் நலனில் அக்கறை

தமிழவேல், துணை செய்தி ஆசிரியர்

புதிய அரசாங்கத்தின் முதல் வரவு செலவுத் திட்டம். புதிய நிதி அமைச்சரின் முதல் வரவு செலவுத் திட்ட உரை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் நாடாளுமன்றத்தில் நேற்றுத் தாக்கல் செய்தார். சிங்கப்பூர் பொருளியலிலும் சமூகத் திலும் அதிக பாதிப்பிற்குரிய தரப்பின ருக்குக் குறிப்பிட்ட உதவிகளை வழங்கு வதில் கவனம் செலுத்தியது இவ்வாண்டின் வரவு செலவுத் திட்டம். எனினும், திட்டத்தின் ஒட்டுமொத்த கவனம் எதிர்காலச் சவால்களுக்கும் வாய்ப்புகளுக்கும் சிங்கப்பூர் நிறுவனங் களையும் மக்களையும் தயார்படுத்துவதிலேயே இருந்தது.

அமைச்சர் உரையின் முதல் பகுதி வர்த்தக சமூகத்தினரிடையே, குறிப்பாக சிறிய, நடுத்தர நிறுவனங்களின் நீண்ட நாள் குறைகளைக் களையும் திட்டங் களில் கவனம் செலுத்தியது. அவரது உரையின் பிற்பகுதி பரிவும் மீள்திறனும் மிக்க சமூகத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்தியது. குறிப்பாக வாழ்நாள் முழுதும் குறைந்த வருமானம் ஈட்டும் முதியோருக்கான 'மூத்தோர் ஆதரவுத் திட்டம்' பலரும் எதிர்பார்த்துக் காத்திருந்த ஒன்று. இந்த மூத்தோர் ஆதரவுத் திட்டம் சிங்கப்பூரின் சமூகப் பாதுகாப்பு வலைத் திட்டங்களில் முக்கிய, நிரந்தர அம்சமாக இந்த வரவு செலவுத் திட்டத்தில் செயல் படுத்தப்படுகிறது. முதல் ஆண்டிலேயே 65 வயதுக்கும் மேற்பட்ட 140,000க்கும் அதிகமான வசதி குறைந்த மூத்தோர் பயனடைவர். வரும் ஜூலை மாதத்தில் தொடங்கி ஒவ்வொரு காலாண்டிலும் $300 முதல் $750 வரையிலான நிதி உதவியை அவர்கள் பெறுவர்.

தற்போது அவர்கள் பெறும் மற்ற சலுகைகளுடன் இந்தப் புதிய நிதியுதவி யும் கிடைக்கவுள்ளது. மூத்தோர், குறைந்த வருமானம் பெறும் ஊழியர்கள், உடல் குறையுள்ளோர் ஆகிய மூன்று முக்கிய தரப்பினர் கூடுதல் உதவி பெறுவர். சிறார், மாண வர்கள், வசதி குறைந்த குடும்பங்களுக் கும் கூடுதல் உதவி கிட்டும். வசதி குறைந்த குடும்பங்களில் உள்ள சிறார்களின் சுகாதார, கல்வித் தேவைகளுக்காக $20 மில்லியன் செல வில் புதிய 'கிட்ஸ்டார்ட்' எனும் முன் னோடித் திட்டம் அறிமுகம் காண்கிறது. முதற்கட்டமாக இத்திட்டத்தின்மூலம் 1,000 சிறார் பயனடைவர். இது தவிர இனிமேல் பிறக்கும் குழந்தைகளுக்கான 'பிள்ளை மேம்பாட்டுக் கணக்கில்' அரசு $3,000 நிதியைத் தொடக்க மானியமாக வழங்கிவிடும். பெற்றோர் அதற்காக எந்தச் சேமிப்பும் செய்யத் தேவையில்லை. அதைத் தொடர்ந்து பெற்றோர் மேலும் $3,000 அக்கணக்கில் சேமித்தால் அரசு கூடுதலாக $3,000 நிதியை மானியமாகச் சேர்க்கும்.

பட்ஜெட்டில் சமூக நலன் ஒரு கண் என்றால் சிங்கப்பூர் நிறுவனங்கள் மற் றொரு கண்ணாக அமைந்தது. கூடுதல் வருமான வரிச் சலுகை, மேலும் எளிதாக வர்த்தகக் கடன்கள் பெறுவது, சிறப்பு வேலைவாய்ப்பு இணை நிதித் திட்ட நீட்டிப்பு ஆகியவை சிறிய வர்த்தகங்களுக்குப் பெரிதும் உதவும். மாறி வரும் உலகச் சூழலை மனதில் கொண்டு புத்தாக்கம், எந்திரனியல், தொழில்நுட்பம் ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. இதற்காக ஜூரோங்கில் புதிய புத்தாக்க வட்டாரம் அமைக்கப்படும். அதே சமயம் ஊழியர்கள் வேலைகளைத் தக்கவைத்துக் கொள் ளவும் ஆட்குறைப்பைக் குறைத்து வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் திட்டங் கள் வகுக்கப்பட்டுள்ளன. கவனமாகச் செலவு செய்யும் அதே வேளையில் 2016 பட்ஜெட்டில் கிட்டத்தட்ட $3.4 பில்லியன் உபரி எதிர்பார்க்கப் படுகிறது. இதற்கு தெமாசெக் முதலீட்டு நிறுவனம் மொத்த முதலீட்டு வருவாய் திட்டத்தில் இணைக்கப்பட்டதை முக்கிய காரணமாகக் குறிப்பிட்டார் திரு ஹெங்.

"இந்த அரசாங்கத்தை வலுவான நிலையில் தொடங்குகிறோம். இனிமேல் எதிர்காலத்திற்குத் திட்டமிடவேண்டும். நமது பொருளியலை, நமது திறன்களை மேம்படுத்த வேண்டும். மக்களுக்கு நல்ல வேலைகளை உருவாக்கவேண்டும். செலவுகளில் சிக்கனத்தைக் கையாள வேண்டும்," என்றார் அமைச்சர் ஹெங்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!