பட்ஜெட் 2016: கடற்துறை, பதனீட்டுத் தொழில்துறைகளில் வெளிநாட்டு ஊழியர் தீர்வை உயர்வு இராது

கடற்துறை, பதனீட்டுத் துறை ஆகியவற்றில் தொழில் நிலவரங் கள் சரியில்லாமல் இருப்பதையும் அவற்றில் ஒர்க் பர்மிட் ஊழியர் கள் குறைவதையும் கருத்தில் கொண்டு அந்தத் துறைகளில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான தீர்வை அதிகரிப்பு ஓராண்டுக்கு இராது. தயாரிப்புத் துறையிலும் அடுத்த ஓராண்டுக்கு தீர்வையில் மாற் றம் இருக்காது என்று நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் நேற்று 2016 வரவு செலவுத் திட் டத்தில் அறிவித்தார். சென்ற 2015 வரவுசெலவுத் திட் டத்தில் அறிவிக்கப்பட்டதைப் போலவே சேவைத் துறையிலும் கட்டுமானத் துறையிலும் தீர்வை அதிகரிக்கும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

கட்டுமானத் துறையில் 'அடிப்படை நிலை ஆர்2' (Basic Tier R2) ஊழியர் களுக்கான தீர்வை இப்போது $550 ஆக உள்ளது. இது வரும் ஜுலை முதல் $650 ஆகும். உற்பத்தித்திறனுக்கு ஆதரவு தரும் வகையில் நிறுவனங்கள் அனுபவம் வாய்ந்த ஊழியர்க ளைத் தக்க வைத்துக்கொள்ள ஊக்கமூட்ட அடுத்த ஆண்டு ஜூலை முதல் குறைந்தபட்ச அனுபவத் தேவை இரண்டிலி ருந்து மூன்று ஆண்டுகளாக உயர்த்தப்படும்.

சேவைத் துறையில், 'ஆர்2' ஊழியர்களுக்கான தீர்வை, அடிப்படை நிலைக்கு $420ல் இருந்து $450க்கும் நிலை2 (Tier 2) ஊழியர்களுக்கு 550 லிருந்து 600 ஆகவும் நிலை 3 (Tier 3) ஊழியர்களுக்கு $700 முதல் $800 ஆகவும் உயரும். 'எஸ் பாஸ்' தாரர்களுக்கு (S Pass holder) உரிய தீர்வை யும் வரும் ஜூலை 1 முதல் உய ரும். 'அடிப்படை நிலை (Basic Tier)' ஊழியர்களுக்கான தீர்வை $315 முதல் $330 ஆக வும் நிலை 2 (Tier 2) சேவை ஊழியருக்கான தீர்வை $550ல் இருந்து $650 ஆகவும் அதிக ரிக்கும் என்று கூறப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!