மல்லையா விமானமும் ஏலம் போகிறது

புதுடெல்லி: பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையாவின் சிறிய ரக சொகுசு விமானத்தையும் ஏலத்தில் விற்க சேவை வரித் துறை திட்டமிட்டு வருகிறது. 25 இருக்கைகள் கொண்ட அந்த விமானம் தற்போது மும்பை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மே மாதம் 12, 13 தேதிகளில் அந்த விமானம் ஏலம் விடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏலத்தில் வாங்க விரும்புவோர் முதலில் குட்டி விமானத்தை பார்வையிடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஏப்ரல் 2ஆம் தேதி முதல் மே மாதம் 10ஆம் தேதி வரை விமானத்தை பார்க்க அனு மதி வழங்கப்படும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது.

இந்தக்குட்டி விமானத்தை மல்லையா தனக்காக சிறப்பு வசதி களுடன் ஏற்பாடு செய்திருந்தார். இதன் மதிப்பு 70 மில்லியன் டாலர். இந்தியா முழுவதும் உள்ள 17 வங்கிகளில் ரூ. 9,000 கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டை பிரபல தொழில் அதிபரான மல்லையா எதிர்நோக்கு கிறார். இது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விஜய் மல்லையா இங்கிலாந்து நாட்டுக்குச் சென்று விட்டார். நீதிமன்றத்தில் முன்னிலையாக அவருக்கு அழைப்பாணையும் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவுக்குத் திரும்ப இது உகந்த நேரமில்லை என்று மல்லையா கூறியுள்ளார். இதனால் அவரது சொத்துக் களை ஏலம் விட்டுப் பணத்தை பெறும் முயற்சிகளில் வங்கிகள் ஈடுபட்டுள்ளன. அண்மையில் மும்பையில் உள்ள அவரது கிங்பிஷர் இல்லம் ஏலம் விடப்பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!