‘ஏர் இந்தியா ஒன்’ விமான ஊழியர்களுக்கு காதி உடை

புதுடெல்லி: அதிபர், துணை அதிபர், பிரதமர் ஆகியோரின் அதிகாரபூர்வ விமானமான 'ஏர் இந்தியா ஒன்' நிறுவனத் தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு காதி உடை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய கேவிஐசி எனும் காதி, கிராமத் தொழில் ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர், "உள்நாட்டில் தயாராகும் காதி ஆடைகளை பொதுமக்களிடம் பிரபலப்படுத்த ஆலோசிக்கப்பட்டது. அதன்படி, 'ஏர் இந்தியா ஒன்' விமான ஊழியர்கள் அனைவரும் விரைவில் காதி உடைகளை அணியத் துவங்குவர்," என்றார். மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக காதி உடைகளை அனைவரும் அணிய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி, முன்னதாக வானொலியில் பேசியபோது வலியுறுத்தியிருந்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!