தமிழ் மணம் மாறாத தலைப் பொங்கல்

வில்சன் சைலஸ்

திரு­ம­ணத்­துக்கு முன்பு வெவ்வேறு இல்­லங்களில் பெற்­றோ­ரு­டன் பொங்கல் கொண்டா­டி­ய­வர்­கள் ஒரே வீட்டில் தங்கள் முதல் பாரம்ப­ரிய விழாவை மகிழ்ச்­சி­யு­டன் கொண்டா­டு­கின்ற­னர். கடந்த ஜூன் மாதத்­தில் திரு­ம­ணம் செய்­து­கொண்ட திரு நாரா­ய­ணன் வேலா­யு­தம், திருமதி தேவி கணேசன் தம்ப­திக்கு இது தலைப் பொங்கல். சர்க்­கரைப் பொங்கல், வெண் பொங்கல் என இரு­வகைப் பொங்கல் சமைத்து, இறை வழி­பாட்­டிற்­குப் பிறகு மூத்தோர் ஆசி வழங்க, இத்­தம்ப­தி­யின் தலைப் பொங்கல் களை­கட்­டு­கிறது.

பொங்கல் தினத்­தன்­றும் வேலைக்­குச் செல்ல வேண்டிய சூழல் நில­வினா­லும் முறைப்­படி பொங்கல் கொண்டாட இவர்­கள் தவ­ற­வில்லை.

பொங்கல் கொண்டாட்­டத்­திற்கு உரிய சடங்­கு­களை­யும் வழக்­கங்களை­யும் பின்­பற்­று­வ­தில் திரு நாரா­ய­ணன் தம்பதி கூடு­த­லா­கக் கவனம் செலுத்­து­கின்ற­னர். "பொங்கல் பானைக்கு மஞ்சள் கிழங்கு கட்­டு­தல், கோலம் போடுதல், வாழை இலையில் பொங்கல் படைத்­தல், அன்றைய தினம் உற்றார் உற­வி­னர்­களி­டம் நலம் விசா­ரிப்­ப­தற்­குப் பதில் 'பால் பொங்­கி­விட்­டதா' என்று விசா­ரித்­தல் என ஒவ்­வொன்றை­யும் வழக்­கம் மாறாமல் செய்து வரு­கி­றோம்," என்ற­னர் திரு, திருமதி நாரா­ய­ணன் தம்பதியர்.

தமது பெற்றோர், தாத்தா திரு எஸ்.நாரா­ய­ணன், பாட்டி திருமதி என்.அழ­கம்மை ஆகி­யோ­ரு­டன் கூட்­டு­ரிமை தனியார் அடுக்­கு­மாடி வீடு ஒன்றில் தம்பதி சகி­த­மாக வசித்து வரு­கிறார் நாரா­ய­ணன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!