கடைசி ஓவரில் வென்ற இந்தியா

பெங்களூரு: கடைசி ஓவரில் இந்திய அணியின் பந்துவீச்சு ஜொலிக்க அவ்வணி பங்ளாதேஷை ஓர் ஓட்டம் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. பெங்களூரு சின்னசாமி விளை யாட்டரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற நிலை இருந்தது. வெற்றி பெற்றால்தான் அரையிறுதி வாய்ப்பைத் தக்கவைத்துக் கொள்ள முடியும். பூவா தலையாவில் வென்ற பங்ளாதேஷ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

பங்ளாதேஷ் அணியில் தமிம் இக்பால் சேர்க்கப்பட்டார். தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கிய ரோகித் சர்மாவும் தவானும் நிதானமாக ஆடினார்கள். இதனால் இந்தியாவின் ஓட்ட எண்ணிக்கை மெதுவாக நகர்ந்தது. 6 ஓவர்களில் ரோகித்தும் தவானும் ஆளுக்கு ஒரு சிக்சர் அடிக்க ஆட்டத்தில் சூடு பிடித்தது. ஆனால் அந்த ஓவரின் கடைசி பந்தில் தேவையில்லாத பந்தடித்து ரோகித் சர்மா ஆட்டம் இழந்தார். விக்கெட் விழுந்த பிறகு பொறுப்பாக ஆடி வேண்டிய தவான் அடுத்த ஓவரிலேயே அல் ஹசன் பந்தில் ஆட்டமிழந்தார். இதனை அடுத்து களமிறங்கிய கோஹ்லியும் ரெய்னாவும் அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் இந்திய அணி 11 ஓவர்கள் முடிவில் 73 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!