அதிமுக ஆதரவு தேர்தல் அதிகாரிகள்: கனிமொழி அதிருப்தி

மதுரை: தமிழகத்தில் ஆளும் தரப்பினர் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி என்று கூறியுள்ளார். அதிமுகவினர் தேர்தல் நடத்தை விதிமுறைகளைத் தொடர்ந்து மீறுவதாக அவர் டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் நைதியிடம் நேரில் அளித்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார். இதையடுத்து செய்தியாளர் களிடம் பேசிய அவர், தேர்தல் நேரத்தில் அதிமுக சார்புடைய அதிகாரிகள் சிலரது செயல்பாடு கள் பற்றி பெரும் சர்ச்சை எழுந்துள்ளதாகக் கூறினார்.

"ஒருசில தரப்பினரின் அத்துமீறல்கள் குறித்து எத்தனை புகார் அளித்தாலும் சில அதிகாரி கள் கண்டுகொள்வது இல்லை. கண்கூடாகவும் வெளிப்படையாக வும் பல பொருட்கள் மக்களிடம் விநியோகிக்கப்படுகின்றன," என் றார் கனிமொழி. தமிழக அமைச்சர் ஒருவர் எதிர்க்கட்சித் தலைவர்களை மிகவும் தரக்குறைவாகப் பேசிய தாகக் குறிப்பிட்ட அவர், அது தொடர்பாக புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என அதிருப்தி தெரிவித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!