விஜயகாந்த் புறக்கணித்தார்; சரத்குமார் நழுவினார்

சென்னை: பாரதிய ஜனதா கூட்ட ணியை விஜயகாந்த் புறக்கணித்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சி அதிமுக கூட்டணிக்குத் தாவியதால் ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு அதிர்ச்சிகளை எதிர்கொண்டது பாஜக. நாடாளுமன்றத் தேர்தலைப் போலவே நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலிலும் தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க விரும்பியது பாஜக. ஆனால் முதல்வர் வேட்பாளராக விஜய காந்தை அறிவிக்க தயக்கம் காட்டி வந்தது.

இதற்கிடையே திமுக, மக்கள் நலக்கூட்டணி ஆகியவையும் விஜயகாந்தை தங்கள் பக்கம் இழுப்பதில் ஆர்வம் காட்டின. இரு தினங்களுக்கு முன்பு வரை யாருக்கும் பிடிகொடுக்கா மல் நழுவி வந்த விஜயகாந்த், நேற்று முன்தினம் மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து தேர் தலை எதிர்கொள்ள இருப்பதாக அறிவித்தார். இத்தனைக்கும் இரு தினங்களுக்கு முன்புதான் அவரை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பது குறித்துப் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தமிழக பாஜக தலைவி தமிழிசை தெரிவித்திருந்தார். ஆனால் பாஜக முடிவுக்கு காத்திராமல், மக்கள் நலக் கூட் டணியுடன் கைகோர்த்துள்ளார் விஜயகாந்த்.

எப்படியும் கடைசி நேரத்தில் நடைபெறும் அரசியல் பேரங் களைத் தொடர்ந்து தேமுதிக தங்கள் அணிக்கு வரும் என பாஜக வெகுவாக எதிர்பார்த் திருந்ததாகத் தெரிகிறது. அதே போல் திமுக தலைமையும் விஜய காந்த் கூட்டணிக்கு சம்மதிப்பார் எனக் காத்திருந்தது. ஆனால் இரு தரப்புக்கும் அதிர்ச்சி வைத் தியம் அளித்துள்ளார் விஜயகாந்த்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!