கருணாநிதி- அழகிரி திடீர் சந்திப்பு; மீண்டும் திமுகவில் இணைகிறார்

சென்னை: அரசியல் அரங்கில் திடீர் திருப்பமாக திமுக தலைவர் கருணாநிதியை அவரது மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி நேற்று திடீரென சந்தித்துப் பேசினார். இதனால் திமுக வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது. இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து மு.க.அழகிரி தேர்தலுக்கு முன்பே திமுகவில் மீண்டும் இணைத்துக் கொள்ளப்படுவார் எனத் தெரிகிறது. கடந்த 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கட்சி விரோதப் போக்குடன் செயல்படுவதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார் அழகிரி. அதன் பின்னர் கருணாநிதியை முதன் முறையாக சந்தித்துள்ளார் அழகிரி.

இதையடுத்து செய்தியாளர்க ளிடம் பேசிய அவர், தந்தை என்ற முறையில் கருணாநிதியை மரியாதை நிமித்தம் சந்தித்ததாகக் கூறினார். கடந்த இரண்டு ஆண்டுகளில் பலமுறை சென்னை வந்த போதி லும், திமுக தலைவரை அழகிரி சந்தித்துப் பேசவில்லை. ஒருசில முறை கோபாலபுரம் இல்லத்துக்குச் சென்றபோது தனது தாயார் தயாளு அம்மாளை மட்டுமே சந்தித்து நலம் விசாரித்தார். இந்நிலையில், திமுக கூட்டணி யில் இணையும் என எதிர்பார்க்கப் பட்ட தேமுதிக, திடீரென மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்துள் ளது. இது திமுகவுக்குப் பின்ன டைவை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!