மணமுறிவான, வாழ்க்கைத் துணையை இழந்த 223 பெற்றோருக்கு வீவக வீடுகள்

மணமுறிவான, வாழ்க்கைத் துணையை இழந்த பெற்றோருக்கான திட்டம் மூலம் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளுக்கு விண்ணப்பம் செய்திருந்த மொத்தம் 223 பேருக்கு வீவக வீடுகள் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் 2013ஆம் ஆண்டு மே மாதத்தில் துவங்கியது. அப்போதிருந்து கடந்த ஆண்டு மே மாதம் வரை 230 விண்ணப்பங்களை வீவக பெற்றதாக தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் கோ போ கூன் கூறினார்.

விண்ணப்பத்தில் வெற்றி பெற்றவர்களில் 85 பேர் வீவகவிடமிருந்து நிதி உதவி கேட்டதாகவும் அவர்களில் பாதி பேருக்கு உதவி கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார். உதவி நாடியோரில் பலருக்கு மறுவிற்பனை தீர்வையைச் செலுத்த பணம் தேவைப்பட்டதாக அறியப்படுகிறது. வாடகை வீடுகளுக்கான காத்திருப்பு நேரம் 2008ஆம் ஆண்டில் 21 மாதங்களாக இருந்தது. கடந்த ஆண்டு இது நான்கு மாதங்களுக்குக் குறைந்ததாக டாக்டர் கோ தெரிவித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!