பீரங்கிக் குண்டு பயிற்சியை வடகொரியத் தலைவர் பார்வையிட்டார்

சோல்: உண்மையான பீரங்கிக் குண்டுகளைப் பயன்படுத்தி வடகொரிய ராணுவ வீரர்கள் மேற்கொண்ட பயிற்சியை வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் பார்வையிட்டதாக ஊடகத் தகவல்கள் கூறின. தென்கொரிய அதிபரின் அதிகாரத்துவ இல்லத்தைக் குறிவைத்து தாக்குவது போன்ற பயிற்சி அது என்று கூறப் படுகிறது. வடகொரியாவைத் தாக்க எதிரிகள் விரும்பினால் சோல் நகரை முற்றாக அழிப்போம் என்று கிம் உறுதியளித்திருப் பதாகவும் உள்ளூர் ஊடகத் தகவல் தெரிவித்தது. அமெரிக் காவும் தென்கொரியாவும் சேர்ந்து பெரிய அளவில் கடற்படை பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன.

வடகொரியாவில் ராணுவப் பயிற்சியை பார்வையிட்ட வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ராணுவ அதிகாரி களுடன் சேர்ந்து அவர் பூரிப்படைகிறார். அமெரிக்காவும் தென் கொரியாவும் கூட்டாக மேற்கொண்டு வரும் கடற்படை பயிற்சிக்கு பதிலடியாக உண்மையான பீரங்கிக் குண்டுகளைப் பயன்படுத்தி பயிற்சி செய்யுமாறு ராணுவத்தினருக்கு கிம் உத்தரவிட்டார். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!