பிரசல்ஸில் 6 பேர் கைது

பிரசல்ஸ்: பெல்ஜியத் தலைநகர் பிரசல்ஸில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விசாரணை நடந்து வரும் வேளையில் சந்தேகப் பேர்வழிகள் 6 பேரை பெல்ஜியப் போலிசார் கைது செய்துள்ளனர். பிரசல்ஸ் நகரில் பல்வேறு இடங்களில் போலிசார் மேற் கொண்ட சோதனையின்போது அவர்கள் கைது செய் யப்பட்டனர். வியாழக்கிழமை பின்னேரம் ஸ்சார்பீக் வட்டாரத்திலும் திடீர் சோதனை மேற்கொண்ட போலிசார் அப்பகுதியில் வீடு வீடாகச் சென்று சோதனை மேற் கொண்டனர்.

பிரெஞ்சு தலைநகர் பாரிஸில் கடந்த நவம்பர் மாதம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கும் கடந்த செவ்வாய்க்கிழமை பெல்ஜியத் தலைவர் பிரசல்ஸில் நடந்த தாக்குதலுக்கும் தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது. பாரிஸ் தாக்குதலுக்கும் பிரசல்ஸ் தாக்குதலுக்கும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப் பேற்றுக்கொண்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள அந்த சந்தேகப் பேர்வழிகளின் அடையாளங்கள் இன்னும் வெளியிடப் படவில்லை. அத்துடன் பிரசல்ஸ் தாக்குதலில் அவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பதும் தெரியவில்லை.

முன்னதாக பெல்ஜியம் அதன் தவற்றை ஒப்புக்கொண்டது. பிரசல்ஸ் விமான நிலையத்தில் தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்ட ஒரு பயங்கரவாதி விஷயத்தில் பெல்ஜியம் தவறு செய்திருப்பதை அந்நாடு ஒப்புக் கொண்டது.

பிரசல்ஸ் நகரில் முகமூடியணிந்த போலிசார், ஸ்சார்பீக் வட்டாரத்தில் பயங்கரவாத சந்தேக நபர்களைத் தீவிரமாகத் தேடுகின்றனர். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!