சிரியாவில் ஆகஸ்ட் மாதத்திற்குள் புதிய அரசியலமைப்புச் சட்டம்

மாஸ்கோ: சிரியாவில் வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் புதிய அரசியலமைப்பு சட்டம் இயற்றப் பட்டு அதன் அடிப்படையில் நிரந்தரமான அரசியல் தீர்வு காண முன்வர வேண்டும் என அமெரிக்காவும், ரஷ்யாவும் வலியுறுத்தியுள்ளன. சிரியாவில் நிரந்தர அமைதி ஏற்படுவது தொடர்பாக ரஷ்ய அதிபரின் மாளிகையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரியும், ரஷ்ய அதிபர் புட்டினும் வியாழக்கிழமை சந்தித்துப் பேசிய பின்னர் அவ் விருவரும் செய்தியாளர்கள் கூட் டத்தில் கலந்துகொண்டனர்.

சிரியாவில் இடைக்கால மாற்று அரசு ஏற்படுத்துவதற்கு வகை செய்யும் முறையில் போராளி குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த சிரியா அரசாங்கம் முன்வர வேண்டும். இந்தப் பேச்சு வார்த்தையின்போது ஆட்சிமாற்றம் மற்றும் திருத்தப்பட்ட அரசிய லமைப்புச் சட்ட மசோதா போன்ற வற்றை உருவாக்குவது எப்படி? என்பது தொடர்பாக வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் இரு தரப்பினரும் முடிவு செய்ய வேண்டும் என காலக்கெடு நிர்ண யிக்கப்பட்டுள்ளது என அவர்கள் குறிப்பிட்டனர்.

ர‌ஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் (இடது) அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி. படம்: ஈபிஏ

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!