‘பெண்களுக்கு இங்கு சம உரிமை’

சுதாஸகி ராமன்

சுதந்திரம் பெற்றதிலிருந்து இன்று வரை சிங்கப்பூரில் பெண்களுக்கு வழங்கப்படும் சம உரிமைகளால் அவர்களுக்கு ஆண்களைப் போலவே வாய்ப்புகள் உள்ளன என்று சட்ட, நிதி மூத்த துணை அமைச்சர் இந்திராணி ராஜா வலியுறுத்தியுள்ளார். பெண்களுக்கு அதிகாரம் வழங்கி அவர்களது சுயமுனைப்பை ஊக்குவித்தல் என்பது பற்றி நேற்று 'ரூபினிஸ் பியூட்டி கன் சால்டன்ட்ஸ்' நிறுவனம் நடத்திய கருத்தரங்கில் கலந்துகொண்ட அமைச்சர் இந்திராணி இவ்வாறு கூறினார். "சுதந்திரத்துக்குப் பிறகு பெண்களுடைய பாதுகாப்புக்கு மாதர் சாசனம் போன்ற வலுவான சட்டங்களை அமலாக்கம் செய்து மகளிர் உரிமைக்கான சமூகக் கட்டமைப்பை அரசாங்கம் ஆரம்பத் திலிருந்தே உருவாக்கியது," என்று விவரித்தார் அமைச்சர்.

பெண்கள் தங்களுக்கு அதி காரம் வழங்கிக் கொள்ளும் சூழலை உருவாக்கியிருக்கும் அர சாங்கத்தின் சட்டங்களைப் பயன் படுத்தி தங்களுக்கு எதிரே வரும் தடைகளையும் கட்டுப்பாடுகளையும் கடந்து முதல் படியை எடுக்குமாறு அவர் வந்திருந்த பங்கேற்பாளர் களைக் கேட்டுக்கொண்டார்.

(இடமிருந்து) ஊடக நிபுணரான திரு விஸ்வா சதாசிவன் கலந்துரையாடலை வழிநடத்த, கலந்துரையாடலில் சிறப்பான கருத்துகளை முன்வைத்த சட்ட, நிதி மூத்த துணை அமைச்சர் இந்திராணி ராஜா, புற்றுநோய் மருத்துவர் டாக்டர் சீ ஹுயி டீ, டாக்டர் உமா ராஜன், இந்தியத் திரைப்பட நடிகர் ஆர். மாதவன். படம்: திமத்தி டேவிட்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!