இடைத் தேர்தல்: சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் தேர்தல் முழக்கவரி

புக்கிட் பாத்தோக் இடைத் தேர் தலில் மக்கள் செயல் கட்சியை எதிர்த்துப் போட்டியிடும் சிங்கப் பூர் ஜனநாயகக் கட்சி நேற்று தனது தேர்தல் முழக்க வரியை வெளியிட்டது. 'இதுவே தக்க தருணம்' என்று பொருள்படும் 'Now is the Time' எனும் முழக்கவரியை அக்கட்சி வெளியிட்டது. கட்சியின் தலைமைச் செயலாளர் டாக்டர் சீ சூன் ஜுவான் புக்கிட் பாத்தோக் இடைத் தேர்தலில் போட்டியிடப் போவ தாக கட்சி இம்மாதம் 20ஆம் தேதி அறிவித்தது. அந்தத் தனித் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த மக்கள் செயல் கட்சியின் திரு டேவிட் ஓங், அத்தொகுதி யின் அடித்தள ஆர்வலர் ஒரு வருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்தது தெரிய வந்ததும் தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் கட்சி உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய் தார்.

காலியான அத்தொகுதியில் விரைவில் இடைத் தேர்தல் நடத் தப்படும் என்று பிரதமர் லீ சியன் லூங் அறிவித்தார். டாக்டர் சீ சூன் ஜுவானை எதிர்த்து வழக்கறிஞர் திரு முரளிதரன் பிள்ளையை மக்கள் செயல் கட்சி இடைத் தேர்தலில் களம் இறக்குகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!