விபத்தில் மாண்ட எஸ்எம்ஆர்டி ஊழியர் படம் இணையத்தில் வெளியான விவகாரம்

இந்த வாரத் தொடக்கத்தில் நடந்த எம்ஆர்டி விபத்தில் மாண்ட இருவருள் ஒருவரின் உடல் தண் டவாளத்தில் கிடந்த படம் கண் காணிப்பு கேமராவிலிருந்து எடுக் கப்பட்டது என்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. போலிஸ் கணினி மூலம் பெறப் பட்ட கண்காணிப்பு கேமரா புகைப் படத்தை முழுநேர போலிஸ் தேசிய சேவையாளர் ஒருவர் எடுத்து அதை தமது குடும்பத்தினரிடமும் நண்பர்களிடமும் பகிர்ந்து கொண் டுள்ளார் என்று போலிஸ் தெரிவித் தாக தி நியூ பேப்பர் நேற்று செய்தி வெளியிட்டிருந்தது.

அந்தப் படத்தில் மரணமடைந்த ஒருவரான திரு முகம்மது அசி ரஃப் அகம்மது புஹாரியின் உடல் தண்டவாளத்தில் கிடப்பது தெளி வாகத் தெரிந்தது. பின்னர் அந்தப் படம் சமூக ஊடக இணையப் பக் கங்கள், 'வாட்ஸ்அப்' போன்ற குறுஞ்செய்தி செயலி போன்றவற் றில் வலம் வந்தது. திரு அசிரஃப் மரணமடைந்த செய்தி அவரது குடும்பத்தினருக் குத் தெரிவிக்கப்படுவதற்கு முன்பே சமூக ஊடங்களில் வலம் வந்த புகைப்படம் பற்றி அவர்கள் தெரிந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்தப் புகைப்படத்தில் மாண்டவரின் வயது, முழுப் பெயர், அடையாள அட்டை எண் போன்ற விவரங்களும் இடம்பெற்றிருந்தன. ஊடகங்களின் கேள்விகளுக்கு நேற்று முன்தினம் பதிலளித்த போலிஸ் பேச்சாளர், அந்தப் படம் போலிஸ் கண்காணிப்புக் கணினி யிலிருந்து எடுக்கப்பட்டது என் பதை உறுதிப்படுத்தினார்.

போலிஸ் தேசிய சேவையாளர் ஒருவர் அந்தப் படத்தை எடுத்து அதை தமது குடும்பத்தினரிடமும் நண்பர்களிடமும் பகிர்ந்து கொண் டுள்ளார் என்றும் தெரிவித்த போலிஸ் பேச்சாளர், சம்பந்தப்பட்ட அந்தத் தேசிய சேவையாளர் அதி காரத்துவ ரகசியச் சட்டத்தின் அடிப்படையிலான குற்றத்தின் பேரில் விசாரிக்கப்பட்டு வருகிறார் என்றும் கூறினார். அந்தப் படம் இணையத்தில் எவ்வாறு பதிவேற்றம் செய்யப்பட்டது என்பது பற்றியும் போலிஸ் விசாரித்து வருகிறது.

பாசிர் ரிஸ் எம்ஆர்டி நிலையத்துக்கு அருகே எஸ்எம்ஆர்டி நிறுவனத்தில் இரு ஊழியர்கள் ரயிலில் அடிபட்டு மரணமடைந்தனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!