சமையற்கலை விருப்பம் வாழ்க்கைத் தொழிலானது

ப. பாலசுப்பிரமணியம்

சுமார் 10 ஆண்டுகளாக கணினி விசைப்பலகையும் கையுமாக இருந்த குமாரி அகத்தா உதே‌ஷிணி சேவியரின் கரங்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ‘கேக்’ மாவைப் பிசைவதில் பக்குவமாகியுள்ளன. இது அவர் தொழில்முனைவராக விரும்பிய தால் ஏற்பட்ட மாற்றம். லண்டனின் பிரசித்திபெற்ற இம்பீரியல் காலேஜ் ஆஃப் லண்டனில் ரசாயனப் பொறியல் துறை பட்டம், ‘லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸில்’ நிதித் துறை முதுகலை பட்டம் என கல்வியில் சிறங்தோங்கி ஓர் ஐரோப்பிய வங்கியில் இவர் பல ஆண்டுகள் பணிபுரிந்தார். செய்யும் வேலை பிடித்திருந் தது.

ஆனால், வாழ்நாள் முழுக்க அத்தொழிலே கதி என்று இருக்க மனம் விரும்பவில்லை. ‘கேக்’ செய்வது அகத்தாவின் பொழுதுபோக்கு. ஓய்வு நேரங் களில் ‘யூடியூப்’ காணொளி களைப் பார்த்து புதிய நுணுக் கங்களை கற்றுக்கொள்வதில் அவருக்குக் கொள்ளை ஆர்வம். சில ஆண்டுகளுக்கு முன், வங்கி வேலையிலிருந்து 3 மாத விடுப்பு எடுத்து, லண்டனின் ‘லெ கோர்டன் பிலூ’ எனும் உலகப் புகழ்பெற்ற சமையல் பள்ளியில் மாவுப் பலகாரங்களை செய்யும் வகுப்புகளில் சேர்ந்து நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டார் அகத்தா.

வாடிக்கையாளர்களை தனது சுவையான கேக், பிரௌனி வகைகளின் வழி ஈர்த்து வரும் தொழில் முனைவர் குமாரி அகத்தா உதே‌ஷிணி சேவியர். படம்: ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

‘டிஎன்ஏ.ஆர்என்ஏ’ குழுவைச் சேர்ந்த ரேச்சல் லின், ஆர்ய லெட்சுமி, நூர் டியானா, நூரின் ஆலியா. படம்: ‘என்.யி.மேஷன்’ இணையத்தளம்

18 Mar 2019

முழுமைத் தற்காப்புக்கு குரல் கொடுக்கும் ஆர்ய லட்சுமி