பிரதமர் மோடி: டீ விற்றபோது அசாம் டீயைத்தான் விற்றேன்

கவுகாத்தி: அசாம் தேர்தல் பிர சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, தாம் டீ விற்ற சமயத்தில் அசாம் டீயையே விற்றதாகத் தெரிவித் தார். "நான் டீ விற்றபோது அசாம் டீயை விற்றேன். இதனால் பலர் புத்துணர்வுப் பெற்றனர். இப்போது அசாம் மாநிலத்திற்குக் கடன் பட்டிருக்கிறேன்," என்றார் அவர். அசாமில் தின்சுகியா என்ற இடத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், ஐந்து ஆண்டு ஆட்சியை பாரதிய ஜனதா கட்சியிடம் ஒப்படையுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார். "அசாம் மாநிலத்தில் வளங்கள் பல இருந்தும் இன்னும் முன் னேறவில்லை. இம்முறை மாற்றத் திற்காக ஐந்து ஆண்டு ஆட்சியை எங்களிடம் ஒப்படையுங்கள். நாங் கள் மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்வோம்.

இந்தத் தேர்தலில் நாங்கள் தரூண் கோகாய்க்கு எதிராகப் போராட வில்லை. இது வறுமைக்கு எதி ரான போராட்டம். கோகாய்க்கு வயதாகி விட்டது. அவர் ஓய்வு எடுக்கட்டும். இளம் தலை முறையைச் சேர்ந்த ஒருவர் முதல் வராகட்டும்," என்று திரு மோடி முழங்கினார். அசாம் மாநிலத்தின் தற் போதைய முதல்வர் தரூண் கோகாய் ஆவார். "அசாமில் பல்வேறு கிராமங் களில் இன்னும் மின்சார இணைப்பு, மின்கம்பம்கூட இல்லை. 60 ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் எதுவும் கிடைக்க வில்லை. மாநிலத்தின் வளர்ச்சியே எங்களின் நோக்கம். இந்த வளர்ச்சி அனைத்துத் துறையிலும் இருக்க வேண்டும். அத்துடன் இது வேகமாக நடக்க வேண்டும். இதுவே எனது திட்டம்," என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

ஐந்து ஆண்டு ஆட்சியை எங்களிடம் ஒப்படையுங்கள். மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்கிறோம் என்று பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி கூறினார். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!