விஜயகாந்த் அணி நிச்சயம் பிளவுபடாது: பிரேமலதா திட்டவட்டம்

நெல்லை: மக்கள் நலக்கூட்டணி யில் யாராலும் பிளவு ஏற்படுத்த இயலாது என்றும், பிளவு ஏற்படுத்த சில தரப்பினர் முயற்சி செய்வ தாகவும் தேமுதிக தலைவர் விஜய காந்தின் மனைவி பிரேமலதா குற்றம்சாட்டி உள்ளார். மக்கள் நலக்கூட்டணியில் தேமுதிக ஐக்கியமான கையோடு தேர்தல் பிரசாரத்தை துவங்கி விட்டார் பிரேமலதா விஜயகாந்த். நெல்லையில் நடைபெற்ற தேமுதிக தேர்தல் அறிக்கை விளக்கப் பொதுக் கூட்டத்தில் பிற கட்சிகளை அவர் கடுமையாக சாடியும் உள்ளார். "தேமுதிக ஆட்சிக்கு வந்தால் 1 லிட்டர் பெட்ரோல் 35 ரூபாய்க்கு விற்கப்படும். அனைத்து தொகுதி யிலும் பெண்கள் கல்லூரி தொடங் குவோம். அரசுப் பள்ளிகளை மாலை நேரக் கல்லூரிகளாக மாற்றுவோம். ரேசன் பொருட்கள் வீடு தேடி வரும் என தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்குறுதிகள் அனைத்தும் நிறை வேற்றப்படும்," என்றார் பிரேமலதா.

மக்கள் நலக்கூட்டணியும் தேமுதிகவும் இணைந்துள்ள அணி இனி விஜயகாந்த் தலைமை யிலான அணி என்று அழைக்கப் படும் என்று குறிப்பிட்ட அவர், கிராமப்புறங்களில் மக்கள் நலக் கூட்டணி என்று சொன்னால் யாருக்கும் தெரியாது என்றார். "விஜயகாந்த் கூட்டணி என்று சொன்னால் எல்லா தரப்பு மக்க ளுக்கும் நன்றாகத் தெரியும். எனவே, இந்தப் பெயரை கூட்ட ணிக்கு சூட்டியுள்ளோம். நாங்கள் யாருடனும் பேரம் பேசவில்லை. கூட்டணிக்கு அழைத்ததற்காக திமுக தலைவர் கருணாநிதி உள் ளிட்ட அனைவருக்கும் நன்றி," என்று பிரேமலதா கூறினார். இதையடுத்து செய்தியாளர்களி டம் பேசிய அவர், தேமுதிக இடம் பெற்றுள்ள கூட்டனியில் மேலும் பல கட்சிகள் சேர வாய்ப்புள்ள தாகவும், அதிமுக, திமுகவுக்கு மாற்றாக மக்கள் நலக் கூட்டணி செயல்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

"எங்கள் கூட்டணியைச் சேர்ந்த தலைவர்கள் சுமூகமாக ஒற்றுமையாகப் பயணித்து வருகிறார்கள். இதில் குழப்பத்தை ஏற்படுத்த ஊடகங்கள் முயற்சிக்க வேண்டாம். மக்கள் ஆதரவோடு ஆட்சி அமைத்து, மாற்றத்தை ஏற்படுத்துவோம்," என்று பிரேம லதா மேலும் குறிப்பிட்டார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!