பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: ஹெச்.ராஜா, வானதிக்கு வாய்ப்பு

புதுடெல்லி: எதிர்பார்த்தபடி தேர்தல் கூட்டணி அமையாத நிலையில், தேர்தல் களத்தில் தனித்து விடப்பட்டுள்ள பாஜக, முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இம்முறை அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் தேர்தல்களம் காண்கின்றனர். பாரதிய ஜனதா தேசியச் செயலர் ஹெச்.ராஜா சென்னையில் உள்ள தியாகராய நகரில் களமிறக்கப்பட்டுள்ளார். தமிழக பாஜக துணைத் தலைவரான வானதி சீனிவாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட உள்ளார். இம்முறை மாநிலத் தலைவி தமிழிசை சௌந்தரராஜனும் தேர்தல் களம் காண உள்ளதாக கட்சித் தலைமை அறிவித்துள்ளது. எனினும் அவருக்கான தொகுதி பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.

54 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட பட்டியலை மத்திய அமைச்சரும் பாஜக தேர்தல் குழு செயலாளருமான ஜே.பி.நட்டா புதுடெல்லியில் நேற்று முன்தினம் வெளியிட்டார். விரைவில் அடுத்த பட்டியல் வெளியாகும் எனத் தெரிகிறது

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!