அரையிறுதிக்குள் நுழைந்தது வெஸ்ட் இண்டீஸ் அணி

நாக்பூர்: டி20 உலகக் கிண்ணப் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி தகுதி பெற்றுள்ளது. நேற்று முன்தினம் நாக்பூரில் நடந்த ஆட்டத்தில் தென்னாப் பிரிக்கா அணியுடன் அது மோதி யது. ஏற்கெனவே இங்கிலாந்து, இலங்கை ஆகிய அணிகளை வீழ்த்தியிருந்த டேரன் சமி தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி, தென்னாப்பிரிக்காவைத் தோற்கடித்து அரையிறுதியில் விளையாடும் வாய்ப்பை உறுதி செய்யும் முனைப்பில் களமிறங் கியது.

அதே சமயம் தென்னாப்பிரிக்க அணிக்கு இது முக்கியமான ஆட்டம் ஆகும். இந்தப் போட்டியில் தோற்றால் அதன் அரையிறுதி வாய்ப்பு மங்கிவிடும். எதிரணியின் ஓட்ட எண்ணிக் கையை விரட்டி முந்துவது சிரமம் என்று கூறப்படும் நாக்பூர் மை தானத்தில் பூவா தலையாவில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணித் தலைவர் சமி, பந்து வீச்சைத் தேர்ந்தெடுத்து அங்கு கூடியிருந்தவர்களை ஆச்சரியப் படுத்தினார். சமியின் முடிவு சரி என்று நிரூப்பிப்பதுபோல் தென் னாப்பிரிக்க அணி 20 ஓட்டங்கள் எடுப்பதற்குள் ஆம்லா, டு பிளசி மற்றும் ராஸவோவ் ஆகியோரை இழந்து ஆட்டம் கண்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!