பிரேசிலின் வெற்றியைத் தடுத்த சுவாரெஸ்

சாவ் பாவ்லோ: தென் அமெரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த நாடுகளுக் கான உலகக் கிண்ண காற்பந்துப் போட்டி தகுதிச் சுற்றில் லூயிஸ் சுவாரெசின் கோல் பிரேசிலின் வெற்றியைத் தடுத்து நிறுத்தியது. பிரேசிலுக்கும் உருகுவேவுக்கும் இடையிலான ஆட்டம் 2=2 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. கடந்த உலகக் கிண்ண காற்பந்துப் போட்டியில் எதிரணியைச் சேர்ந்த ஆட்டக்காரர் ஒருவரைக் கடித்ததற்காக உருகுவே நட்சத்திரம் லூயிஸ் சுவாரெசுக்கு ஒன்பது அனைத்துலக ஆட்டங்களில் விளையாட தடை விதிக்கப்பட்டி ருந்தது. இந்தத் தடை முடிய, நேற்று முன்தினம் பிரேசிலுக்கு எதிரான ஆட்டத்தில் சுவாரெஸ் களமிறங் கினார். ஆட்டம் தொடங்கிய சில வினாடிகளில் பிரேசில் கோல் போட்டது. வில்லியனிடமிருந்து வந்த பந்தை டக்லஸ் கோஸ்டா வலைக்குள் அனுப்பினார்.

ஆட்டத்தின் தொடக்கத்திலேயே தங்களுக்கு ஏற்பட்ட இந்தப் பின்னடைவிலிருந்து உருகுவே ஆட்டக்காரர்கள் மீள்வதற்குள் 24 நிமிடங்கள் கழித்து பிரேசில் மீண்டும் கோல் வலையைப் பதம் பார்த்தது. இம்முறை ரெனேட்டோ ஆகஸ்டோ கோல் போட்டார். பிரேசில் வெற்றி பெறுவது உறுதி என்ற எண்ணத்துடன் கொண்டாடத் தில் மூழ்கியிருந்த ரசிகர்களை ஆட்டத்தின் 31வது நிமிடத்தில் புகுந்த உருகுவேவின் முதல் கோல் தட்டி எழுப்பியது.

கார்லோஸ் சஞ்செஸ் தலையால் முட்டிய பந்தை கவானி கோலாக் கினார். இடைவேளையின்போது ஆட்டம் 2=1 எனும் கோல் கணக்கில் பிரேசிலுக்குச் சாதகமாக இருந்தது. பிற்பாதி ஆட்டம் தொடங்கியதும் கோல் போடும் பசியுடன் உருகுவே தாக்குதல்களை நடத்தியது. ஆட்டத்தின் 48வது நிமிடத்தில் சுவாரெஸ் அனுப்பிய பந்து வலையைத் தொட்டது. இரண்டு கோல்கள் போட்டு முன்னிலையில் இருந்தும் இறுதியில் வெற்றியை நழுவ விட்ட பிரேசிலுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. விட்டுக் கொடுக்காமல் ஆடிய உருகுவே ஒரு புள்ளி வென்றது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!