டி20: வெறுங்கையுடன் வெளியேற்றம்

கோல்கத்தா: தாய்மண்ணில் நடந்த ஆசிய கிண்ண டி20 கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ் தான், இலங்கை அணிகளைப் புரட்டியெடுத்த பங்ளாதேஷ் அணி, நடப்பு டி20 உலகக் கிண்ணத்தின் சூப்பர் 10 சுற்றில் ஒரு வெற்றியைக்கூடப் பெறாமல் ஏமாற்றத்துடன் நாடு திரும்புகிறது. தகுதிச் சுற்று ஆட்டங்கள் அனைத்திலும் வென்று சூப்பர் 10 சுற்றுக்கு முன்னேறியது மஷ்ரஃபே மொர்ட்டாசா தலை மையிலான பங்ளாதேஷ் அணி. இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி தருணத் தில் வெற்றியைக் கோட்டை விட்ட அந்த அணி, நேற்று முன் தினம் நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத் தில் வென்று ஆறுதல் தேடும் நம்பிக்கையுடன் இருந்தது. அந்த நம்பிக்கையை மெய்ப் பிக்கும் வகையில் அமைந்தது அவ்வணியினரின் பந்துவீச்சு.

இளம் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தஃபிசுர் ரகுமான் எதிரணி வீரர்கள் ஐவரை ஆட்டமிழக்கச் செய்தார். அதிகபட்சமாக அணித் தலைவர் கேன் வில்லி யம்சன் 42 ஓட்டங்களை விளாச, நியூசிலாந்து அணியால் எட்டு விக்கெட் இழப்பிற்கு 145 ஓட் டங்களையே எடுக்க முடிந்தது. இலக்கை விரட்டிவிடும் நம்பிக்கையுடன் களமிறங்கிய பங்ளாதேஷ் அணி தொடக்கம் முதலே மளமளவென விக்கெட்டு களை இழந்தது. ஒன்பது வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேற, 15.4 ஓவர்களில் 70 ஓட்டங்களுக்குச் சுருண்டு 75 ஓட்ட வித்தியாசத்தில் படு தோல்வி கண்டு அவமானத் துடன் வெளியேறியது பங்ளா தேஷ் அணி.

தொடரின் இடையே இளம் வேகப்பந்து வீச்சாளர் தக்சின் அகமதுவிற்கு ஐசிசி இடைக் காலத் தடை விதித்ததுதான் தமது அணி இப்படி மோசமாக வெளியேறக் காரணம் எனக் குறைகூறினார் மொர்ட்டாசா.

நான்கு ஓவர்களை வீசி 22 ஓட்டங்களை மட்டும் விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுகளைச் சாய்த்து இந்த டி20 உலகக் கிண்ணத்தில் ஆகச் சிறந்த பந்துவீச்சைப் பதிவு செய்த பங்ளாதேஷ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தஃபிசுர் ரகுமான். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!