ஸ்கூலிங் மீண்டும் ஒரு சாதனை

அட்லாண்டா: அமெரிக்க தேசிய கல்லூரிகள் திடல்தடச் சங்கத்தின் (என்சிஏஏ) ஆடவருக்கான முதல்நிலை நீச்சல் போட்டிகளில் சிங்கப்பூர் நட்சத்திர வீரர் ஜோசஃப் ஸ்கூலிங் மீண்டும் ஒரு சாதனையை முறியடித்து, தங்கம் வென்றுள்ளார். டெக்சஸ் பல்கலைக்கழக மாணவரான ஸ்கூலிங் 200 யார்டு வண்ணத்துப்பூச்சி பாணி பிரிவில் 1 நிமிடம் 37.97 நொடிகளில் முதலாவதாக வந்து புதிய சாதனையுடன் தங்கத்தைத் தனதாக்கினார். 2014ல் டைலன் போஸ்ச் 1 நிமிடம் 39.33 நொடிகளில் பந்தய தூரத்தை நீந்திக் கடந்ததே முந்தைய சாதனையாக இருந்தது. முன்னதாக, 100 யார்டு வண்ணத்துப் பூச்சி பாணி நீச்சலிலும் முந்தைய சாதனையைத் தகர்த்து தங்கத்தைக் கைப்பற்றியிருந்தார் ஸ்கூலிங்.

ஒட்டுமொத்தமாக, ஐந்து தங்கம் (100 யார்டு, 200 யார்டு வண்ணத்துப்பூச்சி பாணி, 200 யார்டு, 800 யார்டு எதேச்சை பாணி அஞ்சல், 400 யார்டு பலபாணி அஞ்சல்), ஒரு வெள்ளி (400 யார்டு எதேச்சை பாணி அஞ்சல்), ஒரு வெண்கலம் (200 யார்டு பலபாணி அஞ்சல்) என ஏழு பதக்கங்களுடன் என்சிஏஏ வெற்றியாளர் போட்டிகளை அவர் முடித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!