சென்னை: மாணவர்கள் நினைத்தால் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வர இயலும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித் துள்ளார். செங்குன்றம் பகுதியில் நடைபெற்ற மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வில் பேசிய அவர், தமிழகத்தில் மாணவர்களுக்கான சலுகைகள் எதுவும் முறையாகக் கிடைப்பதில்லை என குற்றம் சாட்டினார்.
"மாணவர்கள்தான் சமுதாயத்தின் எதிர்காலத் தூண்கள். ஒரு காலத்தில் மாணவர்களுக்குப் பெற்றோர் சொல்லிக் கொடுத்த நிலைமாறி, இன்று மாணவர்களிடம் பெற்றோர்கள் கற்றுக்கொள்ளும் சூழ்நிலை உள்ளது. மாணவர்களாக இருந்துதான் ராஜாஜி, காமராஜர், அறிஞர் அண்ணா, கருணா நிதி, இந்திரா ஆகியோர் தலைவர் களாக உருவெடுத்தனர். நானும் மாணவராக இருந்துதான் தற்போது உங்கள்முன் நிற்கிறேன்," என்றார் மு.க.ஸ்டாலின். தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி மலர மாணவர்கள் பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், ஒவ்வொரு மாணவரும் தினமும் 10 முதல் 50 நபர்களைச் சந்தித்து, திமுகவின் சாதனைகளை விளக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
"வரும் மே 16ஆம் தேதி அனை வரையும் திமுகவுக்கு வாக்களிக்க வைத்து, திமுக ஆட்சியை மாணவர்கள் மலரச் செய்ய வேண்டும். தற்போதைய அதிமுக ஆட்சியில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை பல லட்சம். "நடைபெற உள்ள தேர்தலில் திமுக வெற்றி பெற்றால், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்துள்ள அனைவ ருக்கும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவதே முதல் பணியாக இருக்கும்," என்றார் ஸ்டாலின்.