தா.பாண்டியன்: கம்யூனிஸ்ட்கள் அரசர்களோ, அரசர்களை உருவாக்குபவர்களோ அல்ல

திருச்சி: கம்யூனிஸ்ட் கட்சியினர் அரசனாகவோ (கிங்) அரசர்களை உருவாக்குபவர்களாகவோ (கிங்மேக்கர்) இருக் கக்கூடாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார். அவரது இக்கூற்று மக்கள் நலக் கூட்டணி, தேமுதிக அணியில் சலசலப்பை ஏற் படுத்தி உள்ளது. அண்மையில் மக்கள் நலக் கூட்டணித் தலைவர்களுடன் செய்தியாளர்களைச் சந்தித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், மக்கள் நலக் கூட்டணியினரை கிங் மேக்கர்கள் என வர்ணித் தார். தன்னை அரசனாக்க மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் விரும்புவதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், விஜயகாந்தின் இக்கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார் தா.பாண்டியன். திருச்சியில் நேற்று செய்தியா ளர்களிடம் பேசிய அவர், தேர்தல் கருத்துக்கணிப்புகளை தாம் ஒருபோதும் நம்பியதில்லை என்றார். "வெற்றிகரமான கூட்டணிக் காக சில சமரசங்கள் செய்து கொள்வதில் தவறில்லை. அதே சமயம் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கிங் அல்லது கிங்மேக்கர்களாக இருக்கக் கூடாது. இது எனது தனிப்பட்ட கருத்து. தேர்தலில் மக்கள் அளிக்கும் தீர்ப்பே இறுதியானது. அதை மட்டுமே ஏற்க வேண்டும். "ஆட்சிக்கு வந்தால் ஊழல் சொத்துகளை பறிமுதல் செய் வோம் என மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப் பாளர் வைகோ தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால் நடைமுறை யில் அது சாத்தியமே இல்லை," என்று தா.பாண்டியன் கூறினார்.

அவரது இந்த வெளிப்படை யான கருத்து இரு கம்யூனிஸ்ட் கட்சியினர் மத்தியிலும் விவாதப் பொருளாகி உள்ளது. இது தொடர்பாக அவரிடம் கட்சித் தலைமை விளக்கம் கோரும் என எதிர்பார்க்கப்படு கிறது. இந்நிலையில், இப்படிப் பட்ட கருத்துகளை யாரும் வெளிப்படுத்தக் கூடாது என கூட்டணிக் கட்சிகளை மக்கள் நலக் கூட்டணியின் ஒருங் கிணைப்பாளர் வைகோ கேட்டுக் கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!