சமகவுக்கு ஒரே ஒரு தொகுதி; பிரசாரத்துக்கு மட்டுமே சரத்குமார்

சென்னை: சமத்துவ மக்கள் கட்சிக்கு அதிமுக கூட்டணியில் ஒரே ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட உள்ளதாக வெளியான தகவலால் அக்கட்சி வட்டாரங்கள் அதிர்ச்சியடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமக தலைவர் சரத்குமாரை தேர்தல் பிரசாரத்துக்கு மட்டுமே அதிமுக தலைமை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற சமகவுக்கு இரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இம்முறை ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்படும் என அதிமுக தலைமை திட்டவட்டமாகக் கூறியதாகத் தெரிகிறது. சரத்குமார் நட்சத்திரப் பேச்சாளராக வலம் வந்து பிரசாரம் செய்ய வேண்டும் என்றும் அதற்குரிய பலன் பின்னர் கிடைக்கும் என்றும் அதிமுக தலைமை அவரிடம் கூறியிருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!