தோற்றுவிப்பாளர் நினைவிடமாக ஃபோர்ட் கேனிங் பூங்கா

முதிய தலைமுறை சிங்கப்பூரர் களுக்கு ஃபோர்ட் கேனிங் பார்க் கில் பல வரலாற்று முக்கிய நினைவு நிகழ்ச்சிகள் நடந் துள்ளன. ஆகையால் அந்த இடமே நாட்டை நிறுவியவர்களின் நினைவிடத்துக்குப் பொருத்த மான இடம் என்று மக்கள் செயல் கட்சியின் மூத்த குழுவினர் கருதுகிறார்கள். நாடாளுமன்ற நாயகர் ஹலிமா யாக்கோப் நேற்று இதனை தெரி வித்தார். "ஃபோர்ட் கேனிங்கின் முக்கியத்துவம், நாட்டுக்கு அது உணர்த்துவது, நம் வரலாற்றுக்கு அது உதவி இருக்கும் விதம் எல்லாவற்றையும் நினைவில் கொள்ள நாம் விரும்புகிறோம்," என்று ஆளும் கட்சியின் அந்தப் குழுவுக்குத் தலைமை தாங்கும் திருவாட்டி ஹலிமா தெரிவித்தார்.

அந்த இடத்தில் தோற்றுவிப் பாளர்கள் நினைவிடத்தை அமைப் பது குறித்து அரசாங்கம் தீவிர மான பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். சிங்கப்பூரை நிறுவிய தலை வர்களைச் சிறப்பிக்கும் வகையில் அவர்களுக்கு நினைவிடம் ஒன்றை அமைக்கும் பொறுப்பை மேற்கொண்டுள்ள அந்தக் குழு அரசாங்கத்திடம் தனது பரிந்துரை யைத் தாக்கல் செய்தது. ஃபோர்ட் கேனிங் பூங்காவை விட கரையோரப் பூந்தோட்டங் களில் இருக்கும் பே ஈஸ்ட் கார்டனைத்தான் தேர்ந்து எடுப்ப தாக அந்தக் குழு கோடிகாட்டியது. இந்த இரண்டு இடங்களும் ஏற் கெனவே நகரச் சீரமைப்பு ஆணை யத்துடன் கலந்து ஆலோசித்து அடையாளம் காணப்பட்டன. ஃபோர்ட் கேனிங் பூங்காவில் நினைவிடத்தை அமைக்கலாம் என்று மசெக மூத்தோர் பிரிவு சென்ற செப்டம்பரில் பரிந்துரைத்து இருந்தது.

அங்கு குட்டைகள், தோட்டங் கள் போன்ற அம்சங்களையும் சிற்பங்களையும் இடம்பெறச் செய் யலாம் என்றும் அதன் வழி ஒரு நாடு என்ற முறையில் சிங்கப்பூரின் பயணத்தை பார்வையாளர்கள் பிரதிபலிக்கலாம் என்றும் அந்தக் குழு தெரிவித்து இருந்தது.

திருவாட்டி ஹலிமா யாக்கோப், பே ஈஸ்ட் கார்டனில் நடந்த முன்னாள் பிரதமர் லீ குவான் இயூ நினைவு நிகழ்ச்சியின்போது ஒரு மரத்தில் வாசகக் குறிப்புச் சீட்டு ஒன்றைத் தொங்கவிடுகிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!