இயேசு கிறிஸ்து செய்த அற்புதங்கள், அனுபவித்த துயரங்கள், துன்பங்கள், அவரின் மரணத் தின் பின்னணி, அற்புதமான உயிர்த்தெழுதல் அனைத்தையும் சித்திரிக்கும் வண்ணம் 'எல்லாம் முடிந்தது' எனும் கருப்பொருளைக் கொண்ட சிறப்பு வெள்ளிக்கிழமை, ஈஸ்டர் நாடகத்தை இரண்டு பாகங்களாக தமிழில் வழங்கியது பிரின்ஸ் சார்ல்ஸ் கிரசெண்டில் அமைந்துள்ள என் இரட்சகர் ஆலயம்.
கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக பரிசுத்த வியாழன், பெரிய வெள்ளிக் கிழமை, உயிர்த்தெழுந்த ஞாயிறு ஆகிய தினங்களை முன்னிட்டு சிறப்பு ஆராதனைகளை இந்த ஆலயம் நடத்தி வருகிறது. இயேசு மரித்து மூன்றாம் நாளான ஈஸ்டர் ஞாயிறு அன்று உயிர்த்தெழுந்தது புதிய வாழ்க்கை, மறுவாழ்வு, நம்பிக்கை அனைத்தையும் குறிக்க இனிப்பு வகைகளையும் மிட்டாய்களையும் சபை மக்கள் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டனர். "இயேசுவைப்போல் நடிக்க அவரைக் குறித்து நிறைய படித் ததோடு நிறைய காணொளி களையும் பார்த்து தயார் செய் தேன். "மேலும், உடலைக் கட்டுடன் வைத்துக்கொள்ள தீவிர உடற் பயிற்சியும் மேற்கொண்டேன்," என்று கூறினார் இயேசு கிறிஸ்து வின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த 46 வயது ஷேன் ஜெயபிரகாஷ்.
நாடகத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியில், தமது சீடர்களை முதன்முறையாக சந்திக்கும் உயிர்த்தெழுந்த கிறிஸ்து. செய்தியும் படமும்: திமத்தி டேவிட்