ஈஸ்வரன்: தொழில்முனைப்பில் புத்தாக்கம் என்பது முக்கியம்

இன்றைய நவீன வர்த்தகச் சூழ லில் புத்தாக்கம் என்பது தொழில் முனைப்பில் மையமாகத் திகழ வேண்டும் என்றும் துடிப்புமிக்க புத்தாக்கம் உடைய சூழலை ஊக்குவிக்க வேண்டும் என்றும் வர்த்தக தொழில் அமைச்சர் (தொழில்) எஸ். ஈஸ்வரன் தெரிவித் துள்ளார். சிங்கப்பூரின் நடுத்தர, நீண்ட கால பொருளியல் வளர்ச்சியைப் பார்க்கும்போது, ஏற்கெனவே இயங்கும் துறைகளை வலுப்படுத் தும் அதே வேளையில், நாம் புதிய வளர்ச்சி வாய்ப்புகளைக் கண்டறிய வேண்டும் என அவர் வலியுறுத் தினார்.

"இம்முயற்சியை முன்னோக்கி கொண்டு செல்கையில் தொழில் முனைவர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு," என்ற அமைச்சர், இன்று இயங்கும் தொழில்கள் அனைத் துலகமயமாக்கத்தை வரவேற்க முன்வருமாறு கேட்டுக் கொண்டார். தொழில்முனைவர் டாக்டர் டி. சந்துருவின் சுயசரிதை நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் நேற்று சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திரு ஈஸ்வரன், இக்கருத் துகளை முன்வைத்தார். வீட்டுக்கு வீடு சென்று கலைக் களஞ்சியம் விற்பவராகத் தொடங் கிய டாக்டர் சந்துரு, இன்று அனைத்துலக அளவில் தரம் வாய்ந்த பாலர் பள்ளிகள் குழுமத் தின் தோற்றுவிப்பாளராக வளர்ந்து உள்ளார்.

முஹம்மது ஃபைரோஸ்

டாக்டர் டி. சந்துரு (இடது) எழுதிய 'பெரிய கனவுகளோடு உச்சத்தை எட்டு' எனும் பொருள்படும் 'Reach the Top with Big Dreams' எனும் சுயசரிதை நூலின் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற வர்த்தக தொழில் (தொழில்) அமைச்சர் எஸ். ஈஸ்வரன் (வலது) நூலை அதிகாரபூர்வமாக வெளியிடுகிறார். நடுவில் இருப்பவர் திருமதி சந்துரு. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!