கைபேசி திருட்டு; கேமராவில் சிக்கிய வாலிபர்

விவோசிட்டி கடைத் தொகுதியில் சில நொடிகளில் காணாமல் போன கைபேசியால் ஊழியர் ஒருவர் பேரதிர்ச்சிக்கு ஆளானார். அந்தக் கைபேசியை கண்ணாடி அணிந்த வாலிபர் ஒருவர் திருடி யிருக்கலாம் என்று நம்பப்படு கிறது. சில நொடிகளில் கைபேசியை லாவகமாக எடுக்கும் வாலிபர், கண்காணிப்பு கேமாராவில் கையும் களவுமாகச் சிக்கியிருக்கிறார்.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற சம்பவம் குறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய விற்பனை உதவியாளர் நூருல் ஹஃபிசா இஸ்மாயில், 21, பிற்பகல் 2.00 மணிக்கு வேலைக்கு வந்த சிறிது நேரத்தில் மேசையில் வைத்திருந்த தமது 'சாம்சங் நோட் 5' கைபேசி காணாமல் போனதாகக் கூறினார். இந்நிலையில் இவரது நண்பர் நூர் அமீரா அய்சாட், ஃபேஸ்புக்கில் பதிவேற்றிய காணொளியில் வாலி பர் ஒருவர் கைபேசி எடுப்பதைக் காண முடிந்தது. முதுகில் பையுடன் பொருட் களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டே செல்லும் அந்த வாலி பர், ஒரு கட்டத்தில் கைபேசியை லாவகமாக எடுத்துவிடுகிறார். இதே காணொளியில் ஹஃபி சாவும் ரொக்கப்பதிவு இயந்திரத் துக்கு முன் அமர்ந்திருப்பதைக் காண முடிந்தது.

விவோசிட்டி கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகள். படம்: நூர் ஹஃபிசா ஃபேஸ்புக் பக்கம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!