தொழில்நுட்ப விளையாட்டுகள் மூலம் தொழிற்பயிற்சி

சுகாதாரப் பராமரிப்புத் துறையில் விளையாட்டுத் தொழில்நுட்பத் தைப் பயன்படுத்தி, அதன் மூலம் நோய்கள் பற்றியும் நோயாளிகளைக் கண்காணிக்கும் முறை பற்றியும் தனது ஊழியர்களுக்குக் கற்பிக் கும் முறையை தேசிய சுகாதாரப் பராமரிப்புக் குழுமம் (என்எச்ஜி) தொடங்கியுள்ளது. இதன் தொடர்பில், சுகாதாரப் பராமரிப்பில் பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்ப விளையாட்டுகள் பற்றிய பரிந்துரைகளைச் சமர்ப் பிக்குமாறு சிங்கப்பூரில் உள்ள சுகாதாரப் பராமரிப்பு ஊழியர் களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. தேர்ந்தெடுக்கப்படும் தொழில் நுட்பக் கற்றல் விளையாட்டுகள் பின்னர் சந்தையில் விற்பனைக்கு விடப்படும்.

இப்படிப்பட்ட தொழில்நுட்ப கற் றல் விளையாட்டுகளை அறிமுகப் படுத்தும் ஒரு தளத்தை உருவாக்க தேசிய சுகாதாரப் பராமரிப்புக் குழு மம் நேற்று டான் டோக் செங் மருத்துவமனையில் சுகாதாரப் புத் தாக்கத் தொழில்நுட்பச் சவால் எனும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய் திருந்தது. சிங்கப்பூர் தகவல் தொடர்பு மேம்பாட்டு ஆணையம் (ஐடிஏ), 'சீரியஸ் கேம்ஸ்' சங்கம் (எஸ்ஜிஏ) ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் டான் டோக் செங் மருத்துவமனை இந்த நிகழ்ச்சியை நடத்தியது. சிங்கப்பூரில் உள்ள எந்த மருத் துவமனை ஊழியரும் ஐடிஏ, எஸ்ஜிஏ ஆகியவற்றுடன் இணைந்து தகுந்த யோசனைகளை உத்தேச தொழில்நுட்பக் கற்றல் விளையாட்டுகளை உருவாக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள். வெற்றி பெறும் குழுவுக்கு $3,000 பரிசுத் தொகையாக வழங்கப்படும். முடிவுகள் வரும் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப் படும்.

நோயாளியின் நெஞ்சு வலியை சமாளிக்கும் முறையை இந்தத் தொழில்நுட்ப விளையாட்டு மூலம் சுகாதாரப் பராமரிப்புத்துறை ஊழியர்களுக்குக் கற்றுக் கொடுக்கலாம். படம்: சுகாதாரப் பராமரிப்புக் குழுமம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!