சென்னை: கோடைக்காலம் தொடங் கியுள்ள நிலையில் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல மாவட்டங்களில் இப்போதே 39 டிகிரி வெப்பநிலை பதிவானதாகத் தகவல்கள் தெரிவிகிகின்றன. பொதுவாக அக்னி நட்சத்திர காலமான மே மாதம்தான் தமிழகத் தில் வெப்பத்தின் தாக்கம் அதிக மாக இருக்கும். ஆனால் கடந்த சில ஆண்டுகளில் இந்நிலை மாறி, ஏப்ரலிலேயே வெயில் கடுமையாக கொளுத்தி வருகிறது.
தற்போது தமிழகத்தில் சராசரி யாக 31 டிகிரி முதல் 39 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகி இருக்கிறது. குறிப்பாக மதுரை, வேலூர், சென்னை, திருநெல்வேலி மாவட்டங்களில் வெப்பத்தின் உக்கிரத்தால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பகல் நேரத் தில் மட்டுமல்லாது இரவிலும்கூட புழுக்கம் அதிகரித்துள்ளது. பகலில் வெளியே நடமாட முடியாத நிலையில் மின்வெட்டு நிலவுவதால் பொதுமக்கள் பெரும் தவிப்புக்கும் புலம்பலுக்கும் ஆளாகியுள்ளனர்.
வெயில் காரணமாக பழ விற்பனை அதிகரித்துள்ளது. படம்: ஊடகம்