சென்னை: விவசாயிகள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்வதைத் தடுக்க வேண்டுமெனில் பயிர்க் கடனை ரத்து செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், விவசாயிகள் பயிர்கள் வாடியதாலும் கடன் சுமையைத் தாங்க முடியாததாலும் தொடர்ச்சியாக உயிரை மாய்த்துக்கொள்வது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாகக் கூறியுள்ளார்.
இதுகுறித்து ஒட்டுமொத்த நாடும் வெட்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அவர், அரசு நடவடிக்கை எடுக்காததால்தான் அவமானங்களும் இத்தகைய உயிரிழப்புகளும் தொடர்வதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.