மத்திய அமைச்சரின் புகார்: முதல்வருக்கு கருணாநிதி கேள்வி

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவையும் பல்வேறு துறைகளின் அமைச்சர்களையும் நேரில் சந்திக்க முடியவில்லை என்ற குற்றச்சாட்டு பலராலும் பல நாட்களாகக் கூறப்பட்டு வருவதாக திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். முதல்வரை இன்று வரை தன்னால் தொடர்புகொள்ள முடிய வில்லை என்று மத்திய மின்சாரத் துறை அமைச்சர் பியுஷ் கோயல் கூறியிருப்பதைச் சுட்டிக்காட்டி யுள்ள அவர், இதற்கு முதல்வரின் பதில் என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார். "செய்தியாளர்களும் ஜெயலலி தாவைப் பார்க்க முடிவதில்லை. மத்திய அமைச்சர்களும் அவரைப் பார்த்துப் பேச முடியவில்லை. வாக்களித்த பொதுமக்களும் தங்கள் குறைகளை முதல்வரிடம் நேரில் சொல்ல வாய்ப்பளிப்ப தில்லை. ஏன், மூத்த அதிகாரிகளே கூட முதல்வரை நேரில் கண்டு நிர்வாகப் பிரச்சினைகளை விவாதிப்பதற்கு நேரம் குறிப்பதில்லை," என்று கருணாநிதி தெரிவித் துள்ளார்.

அமைச்சர்களோ, சட்டப்பேரவை உறுப்பினர்களோகூட, தேவை எழும்போது எளிதாக முதல்வரைச் சந்திப்பதற்கான சூழ்நிலை தமிழ கத்தில் நிலவவில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், இப்படி ஒரு மாநிலத்தின் முதல்வரே திரைமறை வில் வாழ்ந்து கொண்டிருந்தால் நிர்வாகச் சக்கரம் எப்படி மக்களுக்குப் பயன்தரும் வகையில் சுழலும்? என்றும் மாநிலத்தில் ஜனநாயகம் எப்படி உயிர்ப்போடு உலவிட முடியும்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். "மத்திய மின்துறை அமைச்சரே தனக்கு தமிழக முதல்வரையோ அல்லது அமைச்சரையோ சந்தித்து விவாதிக்க வாய்ப்பு கிடைக்க வில்லை என்று தமிழக அரசு பற்றி பேசியிருக்கிறார். எனவே இதற்கு முதல்வர் உடனடி பதில் அளிப்பார் என எதிர்பார்க்கிறேன்," என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!