வளையல்கள் அலங்கரிக்கும் புதுவித ரங்கோலி படைப்புகள்

பெண்கள் அணியும் வண்ண வளை­யல்­களைக் கொண்டு ரங்கோலி கலைப் பொருட்­களைச் செய்யும் 'ரங்கோலி பேங்கிள்= டேங்கிள் கலை வாரம் 2016' நிகழ்ச்சி இம்­மா­தம் 9ஆம் தேதி தொடங்­கி­யது. 30 அமைப்­பு­களு­டன் இணைந்து திருமதி விஜ­யா மோகன் இந்த நிகழ்ச்­சியை ஏற்பாடு செய்தார். வண்­ண­ம­ய­மான 'அக்­ரி­லிக்' அட்டைகள் மீது இரு பரிமாண ரங்­கோ­லி­கள் உரு­வாக்­கப்­பட்­டன.

16, 20, 25, 30 செ.மீ. அள­வி­லான 'ஸ்டைரோ ஃபோம்' பந்­து­களின் மீது முப்­ப­ரி­மாண ரங்­கோ­லி­கள் செய்­யப்­பட்­டன. காலை 9.30 மணி­ய­ள­வில் தொடங்கிய நிகழ்ச்­சி­யில் பிர­த­மர் அலு­வ­லக மூத்த துணை அமைச்­சர் ஹெங் சீ ஹாவ் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்டு சிறிய ரங்கோலி ஒன்றை உரு­வாக்­கினார். நிகழ்ச்­சி­யில் உரு­வாக்­கப்­பட்ட ரங்­கோ­லி­கள் பல்வேறு நலவாழ்வு அமைப்­பு­கள், மூத்­தோ­ருக்­கான இல்­லங்கள் ஆகி­ய­வற்­றில் காட்­சிக்கு வைக்­கப்­ப­ட­வுள்­ளன. இந்தப் புத்­தாக்­க­ முயற்சி சிங்கப்­பூர் சாதனைப் புத்­த­கத்­தி­லும் இடம்­பெற்­றுள்­ளது.

வண்ண வளையல்கள், 'அக்ரிலிக்' அட்டைகள், 'ஸ்டைரோஃபோம்' பந்துகள் ஆகியவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்ட ரங்கோலிகளை திருமதி விஜயா மோகன் (வலது மேல்படம்) ஏற்பாட்டில் பல இனத்தவர் இணைந்து உருவாக்கினர். படங்கள்: விஜயா மோகன்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!