முகைதின் யாசின், முக்ரிஸ் மகாதீர் பற்றி அம்னோ தீர்மானிக்கும்

கோலாலம்பூர்: மலேசிய முன்னாள் துணைப் பிரதமர் முகைதின் யாசின், திரு மகாதீரின் மகன் முக்ரிஸ் மகாதீர் ஆகிய இருவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்து அம்னோ உச்ச மன்றம் தீர்மானிக்கும் என்று அம்னோ கட்சியின் துணைத் தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி கூறியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர்களுடன் சேர்ந்து 'மலேசியாவைக் காப்பாற்றுங்கள்' இயக்கத்தின் கூட்டத்தில் கலந்துகொண்டதற்காக திரு முகைதின் யாசின் மற்றும் முக்ரிஷ் மகாதீருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய முன்னணிக்கும் அம்னோவுக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அதுபற்றி அம்னோ உச்ச மன்றம் முடிவெடுக்கவிருப்பதாக துணைப் பிரதமருமான திரு சாஹிட் கூறினார்.

அக்கூட்டத்தில் கலந்துகொள்ளும் கட்சி உறுப்பினர்கள் மீது அம்னோ ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் என்று அம்னோ கட்சியின் தலைமைச் செயலாளர் துங்கு அட்னான் சனிக்கிழமை கூறியிருந்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!