நம்பிக்கையுடன் நடிக்கும் மாளவிகா

கதாநாயகியை மையமாக வைத்து உருவாகிறது 'நிஜமா நிழலா'. பி.வி.சீனிவாசன் இயக்குகிறார். கதாநாயகியாக நடிப்பது மாளவிகா மேனன். "அம்மா, அப்பா, சகோதரன் என மூவரையும் காப்பாற்ற வேலைக்கு செல்கிறாள் கதாநாயகி. நேர்மையுடன் வாழவேண்டும் என்று எண்ணுகிறாள். இதனால் சமூகத்தில் அவமானங்கள், இன்னல்களை சந்திக்க நேர்கிறது.

எது நிஜம்? எது நிழல்? என்பது புரிவதற்காக சில பிரச்சினைகளைக் கையிலெடுக்கிறாள். அது எதிர்பாராத விளைவுகளைத் தருகிறது," என்கிறார் சீனிவாசன். இப்படத்தில் அகில்குமார் நாயகனாக நடிக்க குஷால், நந்தலாலா, அசோக் பாண்டியன், தீபா ஆகியோரும் உள்ளனர். "கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் நடிப்பது மகிழ்ச்சி தருகிறது. இந்தப் படம் எனக்கு ரசிகர்களிடம் நற்பெயரைப் பெற்றுத் தரும்," என்கிறார் மாளவிகா.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!