விரைவில் வெளியாகிறது 'பாக்கணும் போல இருக்கு' துவார் ஜி.சந்திரசேகர் தயாரிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் 'பாக்கணும் போல இருக்கு'. எஸ்.பி.ராஜகுமார் இயக்கியுள்ள இப்படத்தில் பரதன் நாயகனாகவும் அன்சிபா நாயகியாகவும் நடித்துள்ள னர். இவர்களுடன் சூரி, கஞ்சா கருப்பு, பிளாக் பாண்டி, ஜெயப்பிரகாஷ், லிவிங்ஸ்டன், சிங்கப்பூர் துரைராஜ், முத்துக்காளை, அல்வா வாசு, விஜய் ஆனந்த், சிந்தியா உள்ளிட்ட பலரும் உள்ளனர்.
நகைச்சுவை, காதல், அடிதடி என எல்லாம் கலந்து உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் சூரி, கஞ்சா கருப்பு இணைந்து நகைச்சுவையில் அசத்தியுள்ளனர். கவுண்டமணி, செந்தில், வடிவேலு என முன்னணி நடிகர்களுக்கு நகைச்சுவை வசனங்கள் எழுதி வந்த இயக்குநர் எஸ்.பி.ராஜகுமார், இந்தப் படத்தில் முதல் முறையாக சூரிக்கு நகைச்சுவைக் காட்சிகளை எழுதியுள்ளார். மும்பையைச் சேர்ந்த பிரபல மாடல் அழகி பூஜா இப்படத்தில் குத்தாட்ட பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். தயாரிப்பாளர் துவார் ஜி.சந்திரசேகர் இப்படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமாகிறார். அவர் நேர்மையான காவல்துறை ஆய்வாளர் வேடத்தில் நடித்துள்ளாராம்.