ரூனிக்கு வாய்ப்பில்லாமல் போகலாம்

லண்டன்: ஐரோப்பிய நட்புமுறை காற்பந்தாட்டம் ஒன்றில் சென்ற சனிக்கிழமை இங்கிலாந்தும் ஜெர்மனியும் மோதின. இதில் முதலில் 0-2 என ஜெர்மனியை இரு கோல்கள் போடவிட்ட இங்கிலாந்து பின்னர் மீண்டு வந்து தனது பங்குக்கு மூன்று கோல்கள் போட்டு இறுதியில் 3-2 என ஜெர்மனியை வெற்றி கொண்டது. இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய மூன்று இங்கிலாந்து வீரர்களான ஹேரி கேன், ஜேமி வார்டி, டேலி அலி ஆகியோரால் இனி மான்செஸ்டர் யுனைடெட் அணியின் கேப்டனான வெயின் ரூனிக்கு அணியில் இடம் கிடைக்காமல் போய்விடுமோ என்ற யூகங்கள் கிளம்பியுள்ளன. அந்த ஆட்டத்தில் டேலி அலி கோல் எதுவும் போடாவிட்டாலும் அவர்தான் ஆட்டநாயகன் என்று பலராலும் போற்றப்பட்டார். இவர் ரூனி வழக்கமாக விளையாடும் முன்னணித் தாக்குதல் ஆட்டக் காரருக்கு அடுத்த நிலையில் விளையாடி அனைவரின் பாராட்டு தல்களையும் பெற்றது குறிப்பிடத் தக்கது.

வெயின் ரூனி சண்டர்லேண் டுக்கு எதிரான ஆட்டத்தின்போது காயமடைந்தார். எனினும், அவர் மான்செஸ்டர் யுனைடெட்டுக்காக இந்தப் பருவத்தில் இதுவரை ஏழு கோல்கள் மட்டுமே போட்டுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது. ரூனி பற்றிக் கருத்துரைத்த முன்னாள் ஜெர்மன் அணியின் கேப்டன் லோத்தார் மத்தையூஸ், "நான் ரூனியின் ரசிகன். ஆனால், இன்று அவர் இல்லாதது ஒரு குறையாகத் தெரியவில்லை," என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!