ஸ்பெயினை தடுத்து நிறுத்திய ருமேனியா

ருமேனியா: ஐரோப்பிய நட்புமுறை காற்பந்து போட்டி ஒன்றில் சிங்கப்பூர் நேரப்படி நேற்று அதிகாலை ஸ்பெயினும் ருமேனியாவும் மோ தின. ஸ்பெயின் கோல்காப்பாளரான ஐக்கர் கசியாஸ் நேற்று விளை யாடியதன் மூலம் ஐரோப்பிய காற் பந்தாட்டக்காரர்களிலேயே மிக அதிகமான ஆட்டங்களில் விளை யாடியவர் என்ற பெயர் பெற்றார். ஆனால், ஐரோப்பிய காற்பந்து விருதை வென்ற ஸ்பெயின் நேற்றைய ஆட்டத்தில் ருமேனி யாவை வெற்றி கொள்ள முடியாமல் திணறியது. இறுதியில் இரு நாடுகளும் கோல் எதுவும் போடாமல் ஆட்டம் 0-0 என்ற சமநிலையில் முடிந்தது. யூரோ 2016 கிண்ண காற்பந்து ஆட்டங்கள் தொடங்க இன்னும் இரண்டே மாதங்கள் உள்ள நிலையில், ஸ்பானிய அணியின் நிர்வாகி வின்சண்டே டெல் போஸ்க் இதுவரை அனைத்துலக போட்டிகளில் விளையாடாத செர்ஜியோ ராபர்ட்டோவை கள மிறக்கினார்.

ஸ்பெயின் அணியின் ஜெரார்ட் பிக்கே, பெட்ரோ ராட்ரிகெஸ் ஆகியோர் ருமேனிய கோல்காப்பாளரை சோதித்த போதும் அவர்களால் கோல் போட முடியவில்லை. மறுமுனையில், ஸ்பானிய கோல்காப்பாளரான ஐக்க கசியாஸ் இருமுறை ருமேனியா வின் நிக்கோலே ஸ்டான்சியு அடித்த பந்து கோல் வலைக்குள் புகாமல் தடுத்தார். எனினும், ஐரோப்பிய வெற்றி யாளர்களான ஸ்பெயின் ருமேனிய தற்காப்பு அரணைத் தகர்க்க முடியாமல் திணறியது. இந்த ஆட்டத்தில் சமநிலை கண்டதன்மூலம் ருமேனியா இதுவரை 16 ஆட்டங்களில் தோல்வியைத் தழுவவில்லை என்ற சிறப்பைப் பெற்ற நிலையில், ஸ்பெயின் மூன்றா வது ஐரோப்பிய கிண்ண வெற் றியை நோக்கி தனது கவனத்தை செலுத்துவதில் முனைந்துள்ளது.

ருமேனியாவுடன் நடந்த நட்புமுறை காற்பந்தாட்டத்தில் ஸ்பெயினின் செர்ஜியோ ராபர்ட்டோ (சிவப்பு நிற சீருடையில்) இரு ருமேனிய விளையாட்டாளர்களுக்கு நடுவில் பந்துக்காக போராடுகிறார். படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!