மதுரை: தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் தொங்கு சட்டப்பேரவை அமைந்தால் அதிமுக ஆட்சியமைக்க பாஜக ஆதரவு கொடுக்காது என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித் துள்ளார். நாகர்கோவிலில் செய்தியா ளர்களிடம் பேசிய அவர், மக்கள் நலக் கூட்டணி தற்போது குழப்பத்தில் உள்ளது என்றார். "அந்தக் கூட்டணிக்கு இப்போது என்ன பெயர் என்றே தெரியவில்லை. "ஆரம்பத்தில் வைக்கப்பட்ட பெயரா அல்லது புதிய பெயரா? என்ன பெயர் வைக்கப்போகிறார் கள்? என்பதும் தெரியவில்லை.
"தேர்தல் முடிவின்போது இந்தக் கூட்டணி கடைசி நிலையை எட்டும் வாய்ப்புள்ளது," என்றார் பொன். ராதாகிருஷ்ணன். தமிழகத்தில் 60 விழுக்காடு மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புவதாகக் குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் முதன்முதலில் கருணாநிதிதான் சாராயக் கடை, கள்ளுக்கடையை திறந்து மதுப் பழக்கத்தை உண்டாக்கியதாகக் குற்றம் சாட்டினார். "எனவே அதிமுக, திமுகவால் மதுவிலக்கை கொண்டு வர முடியாது.
"முதலில் அதிமுக, திமுக வினர் வைத்துள்ள மது உற்பத்தி நிறுவனங்களை மூடட்டும். "அதன் பிறகு மதுவிலக்கு பற்றி அவர்கள் பேசட்டும். "அதிமுக, திமுக வேண்டாம் என தமிழக மக்கள் எப்போதோ முடிவு செய்துவிட்டார்கள்," என்று பொன். ராதாகிருஷ்ணன் மேலும் கூறினார்.