பொருளியல் பற்றியும் அது எவ்வாறு சிங்கப்பூரில் வாழும் மக்க ளின் வாழ்க்கையைப் பாதிக்கிறது என்பது பற்றிய விவகாரங்களே குடியரசின் 13வது நாடாளுமன்றத்தில் இன்று முதல் தொடர் விவாதங்களில் முக்கியமாகப் பேசப்படும் என்று புதிய, பழைய, ஆளும், எதிர்க்கட்சி நாடா ளுமன்ற உறுப்பினர்கள் சேனல் நியூஸ் ஏஷியாவிடம் தெரிவித்து உள்ளனர்.
இன்றிரவு 8.30 மணிக்கு அதிபர் டோனி டான் கெங் யாம், தேர்ந்தெடுக்கப்பட்ட 89 உறுப்பினர் கள், இரண்டு தொகுதியில்லா உறுப்பினர்கள் ஆகியோர் முன்னி லையில் உரையாற்றுவார். அதிபர் தமது உரையில், அர சாங்கத்தின் அடுத்த கட்ட சவால்களைப் பட்டியலிடுவார்.
பின்னர் இம்மாதம் 25ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை கூடும் நாடாளு மன்றக் கூட்டங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிபரின் உரைக்கு நன்றி தெரிவித்து நாட் டின் சவால்கள் பற்றிப் பேசுவார்கள்.