போதையுடன் மருத்துவர் ஓட்டிய கார் வீட்டுக்குள் புகுந்தது

பெங்களூரு: பெங்களூருவில் தறிகெட்டு, கட்டுப்பாட்டை இழந்து ஓடிய மெர்சிடிஸ் கார் ஒன்று சாலையோரம் இருந்த வீட்டுக்குள் நுழைந்து மோதிய விபத்தில் 52 வயது நபர் ஒருவர் உயிரிழந்தார்; அறுவர் காயமடைந்தனர். பெங்களூருவில் லால்பாக்கில் இருந்து வைராசந்திர பகுதியை நோக்கி சொகுசுக் காரை 58 வயது சங்கர் என்ற மருத்துவர் ஓட்டிச் சென்றுள்ளார்.

ஜெய் நகர் மாதவன் பூங்கா அருகே ஞாயிறன்று பிற்பகலில் பயங்கர வேகத்தில் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற இரு கார்கள், இருசக்கர வாகனங்கள் மீது மோதியது. இதைத் தொடர்ந்து சாலை யோரம் இருந்த வீட்டின் சுவரை இடித்துக்கொண்டு கார் வீட்டுக் குள் புகுந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த வீட்டில் யாரும் இல்லாததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. இந்தச் சங்கிலித் தொடர் விபத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டிய தையல் தொழிலாளி ரிஸ்வான் என்பவர் சம்பவ இடத் திலேயே பரிதாபமாக மாண்டார்.

படுகாயமடைந்த அவரது மனைவி அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தத் தொடர் விபத்தை ஏற்படுத்திய பனசங்கரியை சேர்ந்த கார் ஓட்டுநர் டாக்டர் சங்கரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாலையோரம் இருந்த வீட்டின் சுவரை இடித்துக்கொண்டு வீட்டுக்குள் புகுந்த காரை மீட்கின்றனர் பொதுமக்கள். கார் மோதிய சாலையோர வீட்டில் வசித்த அறுவரும் மைசூரில் நடைபெறும் திருவிழாவுக்கு சென்றதால் உயிர் தப்பினர். -ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!