பாஜகவின் 500 கோடி பேரம்; நீதிமன்றம் செல்ல காங். முடிவு

டேராடூன்: உத்தரகாண்டில் காங் கிரஸ் ஆட்சி கலைக்கப்பட்ட விவ காரத்தில் அதிருப்தி எம்எல்ஏக் களை விலைக்கு வாங்க பாஜக ரூ. 500 கோடி பேரம் பேசியதாக முன்னாள் முதல்வர் ஹரீஷ் ராவத் குற்றம்சாட்டியுள்ளார். இங்கு அதிபராட்சி அமல்படுத்தப்பட்டதை எதிர்த்து நீதிமன்றத்தை நாடவும் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி கலைக்கப்பட்ட நிலையில், இமாச்சல் காங்கிரஸ் அரசுக்கும் திடீர் நெருக்கடி ஏற்பட் டுள்ளது.

அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலர் பாஜகவிற்கு ஆதரவு அளித்ததாகத் தகவல்கள் வெளியாயின. இதையடுத்து அம் மாநில முதல்வர் வீரபத்திரசிங், காங்கிரஸ் துணைத் தலைவர் சோனியாவை நேற்று சந்தித்து ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள ஆலோசனை நடத்தி வருகிறார். இதனால் இமாச்சல் பிரதேச அரசுக்கு ஆபத்து நெருங்கி வரு கிறது. ஏற்கெனவே வீரபத்திர சிங் மீது உள்ள ஊழல், சொத்துக் குவிப்பு வழக்குகளை சிபிஐ விசாரித்து வருகிறது.

உத்தரகாண்டில் முதல்வர் ஹரீஷ் ராவத், நேற்று தனது பெரும்பான்மையை நிரூபிக்க இருந்த நிலையில் மோடி தலைமை யில் கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ராவத் அரசைக் கலைக்க அவசரமாகப் பரிந்துரை செய்யப்பட்டது. இதையடுத்து உத்தரகாண்டில் அதிபர் ஆட்சிக்கு பிரணாப் ஒப்புதல் அளித்தார். இது காங்கிரஸ் தரப்பில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ஜனநாயகப் படுகொலை என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. மேலும் மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக அதன் மூத்த தலைவர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

உத்தரகாண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹரீஷ் ராவத்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!