எகிப்து விமானத்தைக் கடத்தியவன் கைது; பயணிகள் அனைவரும் உயிர்தப்பினர்

எகிப்துஏர் MS181 விமானத்தைக் கடத்திய நபர் கைது செய்யப் பட்டுள்ளான். அதனைத் தொடர்ந்து, இறுதியாக சிறை பிடிக்கப்பட்டிருந்த பயணிகளும் விடுவிக்கப்பட்டதால் கடத்தல் நாடகம் நேற்று மாலை முடிவுக்கு வந்தது. அலெக்ஸாண்ட்ரா நகரி லிருந்து கெய்ரோவுக்குப் பறந்து கொண்டிருந்த அந்த ஏர்பஸ் விமானத்தில் அப்போது 56 பயணிகள் இருந்தனர். தற் கொலை தாக்குதலுக்கான வெடி குண்டுகளைத் தமது இடுப்பில் கட்டி இருந்த கடத்தல்காரன் விமானத்தை சைப்ரஸ் நோக்கி செலுத்துமாறு உத்தரவிட்டதாகத் தெரிகிறது. அதையடுத்து அந்த விமானம் சைப்ரசுக்குத் திருப்பி விடப்பட்டு லார்னாகா விமான நிலையத்தில் தரையிறக்கப்பட் டது.

சைப்ரஸில் தஞ்சம்கோரியுள்ள அந்த நபர், தம்மைவிட்டுப் பிரிந்து சென்ற அந்நாட்டைச் சேர்ந்த தமது முன்னாள் மனைவியைக் காணவேண்டும் எனக் கோரி னான். இந்தக் கடத்தல் சம்பவம் பயங்கரவாதத் தொடர்புடையது அல்ல என்றும் ஒரு பெண் சம்பந்தப்பட்டது என்றும் சைப்ரஸ் அதிபர் நிகோஸ் அனஸ்டாசி யாடிஸ் செய்தியாளர்களிடம் தெரி வித்தார். இருப்பினும் அதுதான் கடத் தலுக்கு உண்மையான காரணம் என்று உறுதியாகவில்லை. எகிப் தில் சிறை வைக்கப்பட்டு உள்ள பெண் கைதிகளை விடுவிப் பதற்காக அவன் விமானத்தைக் கடத்தியதாக மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.

கடத்தல்காரன் பெயர் செய்ஃப் எல்டின் முஸ்தபா என்று சைப்ரஸ் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!