பிரசல்ஸ் தாக்குதலில் மாண்டவரின் உடல் சென்னை வருகை

பெல்ஜியம் பயங்கரவாதத் தாக்கு தலில் பலியான ராகவேந்திரன் கணே‌ஷின் சடலம் நேற்று சென்னை கொண்டு வரப்பட்டது. அவரது குடும்பத்துக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர். இம்மாதம் 22ஆம் தேதி பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக் குதலில் 35 பேர் கொல்லப்பட்டனர். 300க்கு மேற்பட்டோர் காயமடைந் தனர். விமான நிலையம், மெட்ரோ ரயில் நிலையம் ஆகியவற்றில் நடந்த தற்கொலைத் தாக்குதல் உலகளவில் அதிர்ச்சியை ஏற் படுத்தியது.

அமெரிக்கா, சீனா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 12 பேரும் இத்தாக்குதலில் சிக்கி மாண்டனர். இந்தியர் எவரும் உயிரிழக்கவில்லை என்று அப் போது தெரிவிக்கப்பட்ட போதிலும் ஓர் இந்தியரைக் காணவில்லை என்றும் அவர் சென்னையைச் சேர்ந்த ராகவேந்திரன் கணேஷ் என்றும் தகவல் வெளியானது. பிரசல்ஸில் உள்ள இன்ஃபோ சிஸ் அலுவலகத்தில் பணியாற்றி வந்த ராகவேந்திரன் என்ன ஆனார் என்று கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு மேல் தெரியாமல் இருந்தது.

முன்னதாக, மும்பையில் வசிக் கும் ராகவேந்திரனின் தாயார் அன்னபூரணி, தமிழக முதல்வல் ஜெயலலிதாவுக்கு கடிதம் ஒன்றை எழுதி தமது மகனின் நிலை பற்றி தகவல் பெற வேண்டினார். "ராகவேந்திரன் என் மகன் மட்டு மல்ல, ஒட்டுமொத்த தமிழகத் தின் மகன், இந்தியாவின் மகன்," என்று அவர் தமது கடிதத்தில் கண் ணீர் வடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடிக்கு ஜெயலலிதா கடிதம் ஒன்றை எழுதினார்.

இந்நிலையில், பயங்கரவாதத் தாக்குதலில் ராகவேந்திரன் மாண்டுவிட்டதாக நேற்று முன் தினம் பிரசல்ஸில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்தது. அவரது மரணத்தை உள்ளூர் அதிகாரிகள் உறுதிபடுத்திவிட்ட தாகவும் மான்பீக் ரயில் நிலை யத்தில் அவரது சிதைந்த உடல் கண்டெடுக்கப்பட்டதாகவும் அத் தகவல் கூறியது. இன்ஃபோசிஸ் நிறுவனமும் ராகவேந்திரனின் மரணத்தை உறுதிப்படுத்தியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!