தந்தையும் மகனும் சந்தித்துக் கொண்டது முதல்பக்க நாளிதழ் செய்தியாக வெளியாகும் அதி சயம் கடந்த வாரம் தமிழகத்தில் நிகழ்ந்தது. திமுக தலைவர் கருணாநிதியும் அவரது மகன் அழகிரியும் சந்தித்துக்கொண்ட நிகழ்வுதான் அது. திமுகவிலிருந்து நீக்கப்பட்ட அழகிரி, ஈராண்டுகளுக்குப் பிறகு கருணாநிதியை முதல்முறையாகச் சந்தித்ததால் அரசியல் அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அச் சம்பவம் அமைந்தது. ஆட்சி அதிகாரத்தில் இல்லா மல் பலவீனமாகிப்போன திமுகவை பலமுனைப் போட்டி தேர்தல் களத் திற்குத் தயார்ப்படுத்த பல்வேறு முயற்சிகளில் இறங்கி இருக்கிறது அக்கட்சி. அவற்றில் ஒன்றுதான் அழகிரியை வரவழைக்கும் முடிவு.
காரணம், தென்மாவட்ட திமுகவை பலம் வாய்ந்த கட்சியாக மாற்றியது அவர்தான். ஒரு காலத் தில் அத்தனை இடைத்தேர்தல்களி லும் திமுகவை வெற்றியடையச் செய்தார் அழகிரி. மதுரை மத்திய தொகுதி, மதுரை மேற்கு தொகுதி, திருமங்கலம், திருச்செந்தூர் என பல இடைத்தேர்தல்களை பொறுப் பேற்று நடத்தியதால் அவருக்கு தென்மாவட்ட அமைப்புச் செயலாளர் பதவியும் வழங்கப்பட்டது. எனவே, இப்போது முற்றிலும் வித்தியாசமாகக் காட்சியளிக்கும் தேர்தல் களத்தில் திமுகவின் வெற்றி வியூகத்தை வகுக்க அழ கிரியின் பங்களிப்பு அக்கட்சிக்குப் பெரிதாகத் தேவைப்படுகிறது.