சவால்களை ஒன்றாகச் சமாளிக்க புதிய வளாகம்

சிங்கப்பூரில் பாதுகாப்பு சவால்களைச் சமாளிக்கவும் தொழில் நுட்பச் சிக்கல்களுக்குத் தீர்வுகாணவும் ஒன்றுபட்டு செயல்பட தற்காப்புத் துறை பொறியாளர்களுக்காக ஒருங்கிணைந்த வளாகம் ஒன்று தொடங்கப்பட்டு உள்ளது. தற்காப்பு அறிவியல், தொழில்நுட்ப முகவை என்று அழைக் கப்படும் அந்த வளாகம் தற்காப்புத் துறைப் பொறியாளர்களும் தொழில்நுட்பர்களும் சிங்கப்பூர் ஆயுதப்படையுடன் ஒருங்கிணைந்து செயல்பட வழி வகுக்கும் என்று தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் தெரிவித்தார்.

அறிவியல் பூங்கா, கனெக்ஷன் ஒன், தற்காப்புத் தொழில் நுட்பக் கட்டடம்-ஏ ஆகியற்றில் இருந்த அலுவலகங்கள் இங்கு ஓரிடத்திற்கு வந்துள்ளன. புதிய வளாகத் தொடக்க நிகழ்வில் பேசிய அவர், பயங் கரவாதிகள், இணையக் குற்ற வாளிகள், உயிரியல் தீவிரவாதம் போன்றவற்றைச் சமாளிக்க தற்காப்புப் பொறியாளர்களுக்குத் துறை கடந்த ஒழுங்குமுறை அணுகுமுறை தேவைப்படுகிறது என்றார்.

சிக்கல்களுக்குத் தீர்வுகாணும் மற்றும் புத்தாக்க மையமாகவும் புதிய வளாகம் திகழும் என்றும் திரு ஹெங் சொன்னார். இப் போதைய தற்காப்புத் தொழில் நுட்பக் கட்டடமும் புதிய 12 மாடி விரிவாக்கக் கட்டடமும் சேர்ந்து புதிய வளாகம் உருவாகி உள் ளது. அந்த வளாகத்தில் உள்ள வசதிகளுள் புத்தாக்க சோதனைக் கூடமும் ஒன்று. புதிய அம்சங் களை முயற்சிப்பதற்காக பல்வேறு குழுக்களை விரைவாக ஒன்று திரட்ட இது பயன்படும். அடுத்த 12 முதல் 14 மா தங்கள் வரை கிட்டத்தட்ட 3,000 பணியாளர் களை இந்த ஒருங் கிணைந்த வளாகம் பெற்று இருக்கும்.

Defence Minister Ng Eng Hen

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!